ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவார் - ஜீவன

Published By: Vishnu

10 Mar, 2023 | 03:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால், ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிப்பெறுவார், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என  நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாரிய போராட்டத்துக்கு மத்தியில் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கடந்த வருடத்தில் இதேகாலத்தில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை. 5 மணிநேரம் முதல் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு இருந்தது. 

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு இருந்தது. மருந்து மாத்திரைகளை கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் இருந்தன. அதேபோன்று பால்மாவுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இவ்வாறான நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டையும்,நாட்டு மக்களையும் மீட்டு எடுத்துள்ளார்.

கடந்த வருடத்தில் அரசாங்க புள்ளி விபரங்களின்படி உணவு பணவீக்கம் 100 வீதம் அதிகரித்திருந்தது. இது உத்தியோகபூர்மானவது. ஆனால் சில வியாபாரிகள் 300 வீதத்திற்கும் அதிகரித்திருந்தனர். 

இவ்வாறான நிலைமையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று நாட்டை முன்னால் கொண்டு சென்றுள்ளார். நாட்டை முன்னால் கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இதுவரையான   காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசத் தலைவர்கள் மக்களை சந்தோஷப்படுத்த சட்டங்களை கொண்டு வந்தனர். 

ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சரியான சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை. தவறான சட்டங்களை கொண்டு வந்தமையே நிலைமைகளுக்கு காரணமாக இருந்தது. இதுவரை காலம் கடன் வாங்கியே நாட்டை நடத்திச் சென்றுள்ளோம். இதனால் எமது தலைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் பல அரச நிறுவனங்கள் நஷ்டத்திலேயே இயங்கியுள்ளன. தொடர்ச்சியாக கடன் பெற்று இந்த நிறுவனங்களுக்கு உயிர்கொடுத்துள்ளோம். 

2019 இல் சர்வதேச ரீதியில் கொவிட் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்தன. இதன்போது வரி குறைப்பு நெருக்கடிகளுக்கு காரணமாக அமைந்தன. ஆனால் இப்போது வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முன்னேற்றத்திற்கு முக்கியமானது.

கடந்த மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு 16000 மில்லியன் ரூபா செலவாகவுள்ளது. 

இதனால் என்ன மாற்றம் ஏற்படப் போகின்றது. ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல. மக்கள் ஆணையை அறிந்துகொள்ள ஜனாதிபதித் தேர்தலை நாளை நடத்தினால் அதனை ஆதரிப்போம். 

இப்போதுள்ள நிலைமையில் தேர்தல் நடந்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிப்பெறுவார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படலாம்.

தனிமனிதனாக இருந்து கொண்டு பாராளுமன்றத்திலும் தனக்கான பலத்தை ஏற்படுத்தி நாட்டை ஏதோவொரு வகையில் முன்னால் ஜனாதிபதி கொண்டு செல்கின்றார். 

அதனால் நாட்டை ஒரு சரியான நிலைமைக்கு கொண்டு வந்த பின்னர் எந்த தேர்தலையும் நடத்தலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22