மெத்யூஸின் ஆதங்கம்

Published By: Vishnu

10 Mar, 2023 | 12:27 PM
image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட் அஸ்தமிக்கிறது என ஒவ்வொருவரும் கதைக்கின்றனர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக நாங்கள் நல்லதை செய்யவில்லை. ஏனேனில், நாங்கள் இந்த வருடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடவுள்ளோம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2021 - 2023 கிரிக்கெட் சுழற்சிக்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளது. அத்துடன்  இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான எதிர்பாராத வாய்ப்பும் இலங்கைக்கு இருக்கவே செய்கிறது. அப்படி இருந்தும் இலங்கைக்கு போதுமான டெஸ்ட் போட்டிகள் வழங்கப்படாதது திருப்தி தருவதாக இல்லை என்ற பொதுவான அபிப்பிராயமும் கூடவே தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் இரண்டு தீர்மானம் மிக்க போட்டிகளின் முடிவுகளே அவுஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அணியைத் தீர்மானிக்கவுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றால் அல்லது அந்த டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் இலங்கைக்கு இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான சிறு வாய்ப்பு உருவாகும். அதற்கு நியூஸிலாந்தை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை வெற்றி பெறுவது அவசியமாகும். ஆனால், தற்போது நடைபெற்றுவரும் இந்த நான்கு நாடுகள் சம்பந்தப்பட்ட டெஸ்ட் போட்டிகளின் தற்போதைய நிலையை வைத்து எதனையும் உறுதியாகக் கூறமுடியாது.

இந் நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணை சீராக அமையாவிட்டால் அதன் பெறுமதியை உலகம் எவ்வாறு கணிக்கும் என மெத்யூஸ் கேள்வி எழுப்புகிறார்.

'துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இந்த வருடம் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதாக இல்லை. மிகக் குறைந்த 5 போட்டிகளிலேயே நாங்கள் விளையாடவுள்ளோம்' என அவர் குறிப்பிட்டார்.

இதனைக் கூறிய அதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வர்கள் வரிசையில் மெத்யூஸ் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார். குமார் சங்கக்கார (12400), மஹேல ஜயவர்தன (11814) ஆகியோருக்கு அடுத்ததாக மெத்யூஸ் 7000 ஓட்டங்களுடன் 3ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

'நாங்கள் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறோம். நாங்கள் கடைசியாக 6 மாதங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தோம்' என்றார் அவர்.

இலங்கை கடைசியாக 2022 ஜூலை மாதம் டெஸ்ட் போட்டியில் (பாகிஸ்தானுக்கு எதிரானது) விளையாடி இருந்தது.

'டெஸ்ட் கிரிக்கெட் அஸ்தமிக்கிறது என ஒவ்வொருவரும் கதைக்கின்றனர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக நாங்கள் நல்லதை செய்யவில்லை. இந்த வருடம் நாங்கள் ஐந்து டெஸ்ட்களில் மாத்திரமே விளையாடவுள்ளோம். இந்த வருடம் இன்னும் அதிகமான போட்டிகள் கிடைக்கும் என நம்புகிறோம். ஐந்து போட்டிகள் போமானதல்ல என்றே உணரப்படுகிறது' என அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய விளையாட்டு விழா 50 மீ....

2023-09-29 13:38:37
news-image

54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப்...

2023-09-29 10:26:40
news-image

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது...

2023-09-28 20:30:51
news-image

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது -...

2023-09-28 16:19:57
news-image

தனுஸ்க குறித்தநீதிமன்ற தீர்ப்பு - தசுன்...

2023-09-28 14:27:10
news-image

FFSL தேர்தலில் தக்ஷித்த தரப்பினர் வெற்றிபெறுவது...

2023-09-28 13:38:45
news-image

தனுஸ்க பாலியல் உறவின் போது ஆணுறையை...

2023-09-28 11:43:12
news-image

கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி; தொடர்...

2023-09-28 12:09:25
news-image

தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர்-...

2023-09-28 08:05:35
news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59