மன்னாரில் சுற்று சூழல் தொடர்பாக மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

Published By: Ponmalar

10 Mar, 2023 | 12:15 PM
image

மன்னார் மாவட்டத்தில் சுற்று சூழல் தொடர்பாக ஏற்கனவே யுஎன்டிபி யினால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் சுற்று சூழல் தொடர்பாக மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளாகிய உங்களை அபிப்பிராயங்களை கேட்டு நிற்கின்றோம் என 'சேவ் த லைவ்' என்ற நிறுவனத்தின் தலைவர் கே.ராகுலன் சேன இவ்வாறு தெரிவித்தார்.

'சேவ் த லைவ்' என்கிற தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக கடற்தொழிலாளர்களுக்கான வாழ்வாதார மேம்பாடு தொடர்பான கூட்டம் கடந்த புதன்கிழமை (08) மன்னார். மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் பிரிவுகளின் கடற்தொழில் கிராமிய அமைப்பு பிரதிநிதிகளுடன் மன்னார் கடற்தொழில் தலைமை காரியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது 'சேவ் த லைவ்' என்ற நிறுவனத்தின் தலைவர் கே.ராகுலன் சேன இங்கு தெரிவிக்கையில்...

மீனவ சமூகம் தற்பொழுது தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதையிட்டு நாம் இதுதொடர்பாக குறிப்பிடப்படும் மீனவர்களின் பிரதிநிகளை சந்திக்கின்றோம்.

அதாவது மாந்தை மேற்கு. நானாட்டான் மற்றும் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமிய மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளாகிய உங்களை சந்திக்கின்றோம்.

இது மீனவம் சார்ந்த விடயம் மாத்திரமல்ல. மாறாக மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சுற்று சூழல் தொடர்பாகவே இந்த மூன்று பிரதேச செயலகப் பிரிவும் ஏற்கனவே யுஎன்டிபி யினால் தெரிவு செய்யப்பட்டதாக அமைந்துள்ளது.

சுற்று சூழலில் இன்றையக் காலக்கட்டத்தில் மீனவ சமூகத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது.

மன்னார் மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட சுற்று சூழல் சம்பந்தமான கூட்டத்தில் குறிப்பாக மணல் அகழ்வும் கடலால் மண் அரிப்பும்  தொடர்பாக குறிப்பிடப்பட்டது.

சுற்று சூழல் என்பது பொருளாதார விடயமும் உள்ளடக்கப்பட்டதாக தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நாங்கள் இப்பொழுது இங்கு கூடியிருப்பதன் நோக்கம் உங்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி இவைகளை அறிக்கையாக்கி இங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக உங்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆராய்ந்து இதைத் தொடர்ந்து அவற்றை செயல்வடிவம் கொள்ளப்படும் என இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மீனவ பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது மன்னாரில் கடலோரங்கள் மண் அரிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது.

இது இவ்வாறு இருக்க மின் காற்றாலை அமைக்கும் நடவடிக்கையால் கிராமங்களுக்குள் வெள்ள அபாயமும் தோன்றியுள்ளது. என தெரிவிக்க்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08