ஒழுக்கவியல், சிறப்புரிமைகள் குழு தலைவராக சமல் ராஜபக்ஷ நியமனம்

Published By: Vishnu

09 Mar, 2023 | 10:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 08 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சமல் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்ததுடன் இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட அதனை வழிமொழிந்தார்.

அதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் குழுவில் முன்வைக்கப்பட்டு பூர்த்தி செய்ய முடியாமல் போன சில விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கருத்திற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கு குழுவின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சியொன்றை நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.அதேபோன்று ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை  தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கும் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22