(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை கிரிக்கெட் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக டெஸ்ட ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரான திமுத் கருணாரட்ண தம்வசப்படுத்தினார்.
நியூஸிலாந்து அணிக்கெதிராக இன்று (9) கிறைஸ்ட் சேர்ச்சில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போடியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. இலங்கை சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக ஓஷத பெர்னாண்டோவுடன், திமுத் கருணாரட்ண களமிறங்கினார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக 5930 டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ண, 3 ஓட்டங்களை பெற்றபோது, இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக 5930 ஓட்டங்கள் குவித்து சனத் ஜயசூரிய வசமிருந்த சாதனையை முறியடித்தார்.
திமுத் கருணாரட்ண 50 ஓட்டங்கள் பெற்று ஆட்டிழந்தபோது அந்த ஓட்ட எண்ணிக்கை 5980 ஆக உயர்ந்தது.
இந்த வரிசையில் திமுத் கருணாரட்ண 5980 ஓட்டங்களுடன் முதலாவது இடத்திலும், சனத் ஜயசூரிய 5930 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அடுத்த மூன்று இடங்களில் மார்வன் அத்தபத்து (5317), திலகரட்ண டில்ஷான் (2170), ரொஷான் மஹாநாம (2069) ஆகியோர் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM