ஹன்சிகா நடிக்கும் 'மேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Nanthini

09 Mar, 2023 | 05:32 PM
image

மிழின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய படத்துக்கு 'மேன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் படத்தின் டைட்டிலுக்கான மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

'கலாப காதலன்', 'வந்தா மல', 'வகிபா' ஆகிய படங்களின் இயக்குநர் ஈகோர் இயக்கத்தில் தயாராகும் 'மேன்' படத்தில் ஹன்சிகா மொத்வானியோடு ஆரி அர்ஜுனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

பிகே மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ் மற்றும் அன்சு பிரபாகர் பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். நந்தகோபால் மற்றும் எம்.எஸ். பிரபாகர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கான மோஷன் போஸ்டரில் 'ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு' என்ற கருத்தாக்க வாசகம் இணைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right