ஜனாதிபதி மற்றும் பிரதமர் புகைப்படங்களுடன் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ள பேண்தகு யுகம் தொடர்பிலான சுவரொட்டிகளில் பொது மக்கள் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.

இந்த சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் காணக்கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சுவரொட்டிகளில், இதோ இன்னுமொரு தேர்தல் முடிவு, தூரத்தில் இல்லாமல் நாம் உணரக்கூடிய வளமான யுகத்தை உருவாக்கும் திட்டம் ஜனவரி 2ல் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.