இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இடம்பெற்றுவருகின்றது.

முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி முதல்நாள் நிறைவில் 297 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்துள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பில் எல்கர் 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், டி கொக் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.