logo

கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின பேரணி

Published By: Ponmalar

09 Mar, 2023 | 05:27 PM
image

(எம்.நியூட்டன்)

கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘மகளிர் உரிமையை மதிப்போம்’ என்ற தொனிப்பொருளிலான பேரணியும் மகளிர் சுயதொழில் முயற்சியாளர்களின் விழிப்புணர்வு கண்காட்சியும் விற்பனையும்  இன்று  வியாழக்கிழமை இடம்பெற்றது யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பமான பேரணியானது யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள மடுத்தினார் குருமட முன்வாசலில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் மகளிர் உரிமையைப் பாதுகாப்போம், சுய முயற்சியே சுதந்திர வாழ்வு, மகளிர் உரிமைகள் மதிக்கப்படவேண்டும், மகளிரை மதித்தல் மானிடத்தின் பண்பு, முயற்சியால் முன்னேறும் மகளிர் நாம் போன்ற கோசங்களை எழுப்பியவாறும்  பதாதைகளை  தாங்கிய வாறும் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். பேரணியின் முடிவில் பெண் முயற்சியாளர்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கரித்தாஸ் கியூடெக் இயக்குநர் அருட்பணி யூஜின் பிரான்சிஸ் மற்றும் பணியாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மலைத்தென்றல்' கலாசார நிகழ்வு

2023-06-09 20:46:00
news-image

நன்கொடையாளர்களையும் தேவை நாடும் மகளிரையும் இணைக்கும்...

2023-06-09 19:45:49
news-image

புதிய அலை கலை வட்டம் அமைப்பின்...

2023-06-08 15:56:17
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மதுஷிகனுக்கு...

2023-06-07 21:56:18
news-image

‘பூஞ்செண்டு’ கவிதை நூல் வெளியீட்டு விழா

2023-06-07 21:01:00
news-image

நாவற்குழியில் 'பசுமை அறிவொளி' நிகழ்ச்சி

2023-06-07 14:47:49
news-image

இலங்கையின் முதலாவது மொபைல் ஊடகவியல் விழா

2023-06-06 16:20:33
news-image

பல்லின மாணவர்களும் கலந்துகொண்ட பாகிஸ்தான் புலமைப்பரிசில்...

2023-06-06 17:06:31
news-image

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல்...

2023-06-05 20:03:46
news-image

சிலம்பம் கலையின் தொழில்நுட்ப பணிப்பாளர் நியமனம்

2023-06-05 17:40:20
news-image

ஹேக்கித்த ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான...

2023-06-05 14:18:27
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்ற வருடாந்த...

2023-06-05 15:12:17