(என்.வீ.ஏ.)
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தனது பெயரைக்கொண்ட விளையாட்டரங்கில் கிரிக்கெட்டை சித்தரிக்கும் வண்டியில் பார்வையாளர்களுக்கு கையசைத்தவாறு இந்திய பிரதமர் நரேந்த்ர மோடி சுற்றிவந்தார்.
அவருடன் அவுஸ்திரேலியா பிரதமர் அன்தனி அல்பான்ஸும் கையசைத்தவாறு வண்டியில் மைதானத்தைச் சுற்றி சென்றபோது பார்வையார்கள் ஆரவாரம் செய்துதங்கள் கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
அதன் பின்னர் இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் பிரமுகர்களுக்கான பார்வையாளர்கூடத்திலிருந்து போட்டியைக் கண்டுகளித்தார்.
போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற எளிமையான ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அபான்ஸ் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அங்கீகரித்து போட்டியை வைபவரீதியாக தொடக்கிவைத்தார்.
பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்துடன் 'கிரிக்கெட் மூலம் 75 வருட நட்பைக் கொண்டாடுகிறேன்' என்ற வாசகத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் அல்பான்ஸ் பதிவிட்டிருந்தார்.
நரேந்திர மோடி விளையாட்டங்கில் இன்று (09) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு தீர்மானம் மிக்கதாக அமைவதுடன் அப் போட்டியை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட அரங்கில் குழுமியிருந்தனர்.
எவ்வாறாயினும் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மற்றயை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு பிரதமர்களும் புறப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான மக்களும் விளையாட்டரங்கைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த முதல் 3 டெஸ்ட்களும் 3 நாட்களுக்குள் நிறைவடைந்தன. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றதுடன் 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த அவுஸ்திரேலியா முயற்சிக்கும் அதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதை உறுதிசெய்வதற்கு இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் வெற்றி அவசியமாகத் தேவைப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அல்பான்ஸ், அடுத்த மூன்று நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM