2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு கிழக்கு பல்கலைக்கழக அனுமதி பெற்ற கலை கலாசார பீடத்திற்குரிய புதிய மாணவர்களை பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இவ் அறிவித்தலை கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் விடுத்துள்ளார்.

 இதன் படி நாளை மறுதினம் 5ஆம் திகதி நடைபெற நடைபெறயிருந்த கலை கலாசார பீடத்திற்குரிய புதிய மாணவர்களை பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டு எதிர்வரும் 19.01.2017ம் திகதி அன்று நடைபெறும்

எதிர்வரும் 19.01.2017ஆம் திகதி பதிவுகளை மேற்கொள்வதற்கு வருகைதரும் கலை கலாசார பீட மாணவர்களுக்குரிய வகுப்புக்கள் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படயிருப்பதினால் விடுதியில் தங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளுடனும் மாணவர்களை தயார்ப்படுத்தி வருமாறும் கலை கலாசார பீட அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் தேவைப்படும் மாணவர்கள் உதவிப் பதிவாளர் மாணவர் விவகாரப்பிரிவின் 0652240731 என்ற இலக்கம், கலை கலாசார பிரிவின் 0652240971 இலக்கத்துடனும் தொடர்பு கொள்ள முடியும்.

அதே நேரம் எதிர்வரும் 17ஆம் திகதி சௌக்கிய பராமரிப்பு பீடத்தினதும், 18ஆம் திகதி விவசாய விஞ்ஞான தொழில்நுட்பப் பீடத்தினதும் 19ஆம் திகதி வர்த்தக முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் முதலாம் வருடத்துக்கான மாணவர்கள் பதிவுகளும் நடைபெறவுள்ளதாகவும் பதிவாளர் அறிவித்துள்ளார்.

விஞ்ஞான பீடம்- 065 2240758, சௌக்கிய பராமரிப்பு பீடம் - 065 2227025, விவசாய பீடம், உயிரியல் தொழில்நுட்பம் 065 2240740, வர்த்தக முகாமைத்துவ பீடம் - 065 2240591 இலக்கங்களில் உதவிப்பதிவாளர்களிடமும் Nமுலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.