மெனிஸ்கல் எக்ஸ்ட்ரூஸன் எனும் பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை

Published By: Vishnu

09 Mar, 2023 | 01:34 PM
image

இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் குறிப்பாக விளையாட்டு மற்றும் நடன துறையில் இருப்பவர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற வேண்டிய சூழலும்... தொடர்ச்சியாக பயிற்சி பெற வேண்டிய சூழலும் இருக்கிறது.

இத்தகைய தருணத்தில் எதிர்பாராத விதமாக மைதானத்திலோ அல்லது மேடையிலோ கால் இடறி விபத்து ஏற்பட்டால்.., அவர்களுக்கு மெனிஸ்கல் எக்ஸ்ட்ரூஸன் எனும் பாதிப்பும் ஏற்படுகிறது. இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால்.., அவர்களின் மூட்டுகள் தேயத் தொடங்கி, மூட்டு வலி உருவாகிறது. இதற்கு தற்போது நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

பொதுவாக இளைய தலைமுறையினர் மாடிப்படிகளில் ஏறும்போதும்.. இசைக்கு ஏற்ற வகையில் நடனமாடும் போதும்.. அல்லது கடற்கரையில் நண்பர்களுடன் சாகச விளையாட்டுகளில் ஈடுபடும் போதும்.. எதிர்பாராதவிதமாக கால் மற்றும் கால் மூட்டுகளில் அடிபடுகிறது. இதன் போது எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டால்.. அவர்களுக்கு மருத்துவர்கள் மெனிஸ்கல் எக்ஸ்ட்ரூஸன் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என விவரிக்கிறார்கள்.

அதாவது மூட்டுகளின் இயங்குத்திறனையும், மூட்டுகளில் தேய்மானம் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மெனிஸ்கல், தன் இயல்பான இடத்திலிருந்து இடம் பெயர்ந்து விடுகிறது.

இதன் போது மேற்கொள்ளப்படும் பிஆர்பி எனும் சிகிச்சை முழுமையான பலனை அளிப்பதில்லை. அதற்கு மாற்றாக நுண்துளை சத்திரை சிகிச்சை மூலம் மெனிஸ்கலை மீண்டும் இயல்பான இடத்தில் பொருத்திவிட்டால், மூட்டுகளில் இயக்கமும் சீராகும். மூட்டுகளின் தேய்மானமும் குறையும். எனவே பாதிப்புகளின் தன்மையை துல்லியமாக அறிந்து கொண்டு மெனிஸ்கல் எக்ஸ்ட்ரூஸன் எனப்படும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை நுண் துளை சத்திர சிகிச்சை மூலம் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

டொக்டர் பாலசுப்பிரமணியன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்காலிக சிறுநீர் தேக்கமடைதல் எனும் பாதிப்பிற்குரிய...

2023-03-31 16:07:44
news-image

ரத்த நாள கட்டியை கண்டறியும் நவீன...

2023-03-31 18:14:41
news-image

உடல் வெப்பத்தை போக்கும் குளியல்

2023-03-30 21:50:12
news-image

நாட்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவை...

2023-03-28 17:09:25
news-image

தொடக்க நிலையிலான ஆட்டிசம் பாதிப்பிற்கு முழுமையாக...

2023-03-27 14:17:26
news-image

வாந்தி - Vomiting

2023-03-25 12:03:56
news-image

அறைகளில் மணமூட்டியை பயன்படுத்தலாமா..?

2023-03-24 15:29:53
news-image

நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பாதிக்கப்படுவது ஏன்?

2023-03-22 17:08:33
news-image

வாய் புற்றுநோய் பாதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சை

2023-03-21 15:44:01
news-image

புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்கான நவீன சிகிச்சை!

2023-03-20 15:53:24
news-image

யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-18 16:51:18
news-image

பச்சையாக சாப்பிடாதீர்கள்!

2023-03-18 12:46:01