1985இல் படகு மூலம் யாழ்ப்பாணத்துக்கு வந்த பழ.நெடுமாறன்: இந்திய, தமிழக அரசுக்கு அறிவிக்கப்பட்ட இலங்கை தமிழர் பிரச்சினைகள்

Published By: Nanthini

09 Mar, 2023 | 12:30 PM
image

(ம.ரூபன்)

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி தஞ்சாவூரில் கூறியது பொய் என்றும் பிரபாகரன் இறுதிப்போரில் இறந்துவிட்டதாகவும் இலங்கை இராணுவம் மீண்டும் அறிவித்துள்ளதை சில தமிழ் அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் பிரபாகரனின் மரணத்துக்கான மரபணு பரிசோதனை செய்யப்படவில்லை; அவர் இறக்கவில்லை என சில தமிழக இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், "பிரபாகரன் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரம் கிடைத்ததும் வெளியிடுவேன்" என பழ.நெடுமாறன் மீண்டும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலைக்குப் பின்பு இலங்கை தமிழ் மக்களின் நலன்களில் நெடுமாறன் அக்கறையோடு செயற்பட்டவர். இலங்கை அகதிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதுடன் பல போராட்டங்களையும் தமிழகத்தில் நடத்தியவர். விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவை பேணிவந்தவர்.

1991ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஜெயலலிதா ஆட்சியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கூட்டத்தில் பேசியதாக 'பொடா' சட்டத்தில் கைதாகி சிறை வைக்கப்பட்டவர்.

1985 நவம்பர் 3 அன்று காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது தமிழகத்தில் இருந்து படகு மூலமாக வடக்கே விடுதலைப்புலிகளால் நெடுமாறன் அழைத்துவரப்பட்டார். 

இச்சம்பவம் அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததுடன், கொழும்பில் வெளிவரும் ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகளும் கடுமையாக விமர்சித்தன. 

நெடுமாறன் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தது குற்றம்; அதனால் அவர் கைதுசெய்யப்பட வேண்டும் என தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி கூறியிருந்தார். 

அதனை கிண்டல் செய்வது போல் 1985 நவம்பர் 7 அன்று த ஹைலேண்ட் பத்திரிகை கார்ட்டூன் படத்துடன் ஆசிரிய தலையங்கத்தை வெளியிட்டது.

இந்திய குடியகல்வு சட்டத்துக்கு விரோதமாக அந்நாட்டை விட்டுச் சென்று, மீண்டும் திரும்பிச் சென்றுள்ளார். இதற்கு இந்திய அதிகாரிகளின் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது.

உதைபந்தாட்டப் போட்டி மைதானத்தில் Goalkeeper (தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி) இரு கைகளையும் உயர்த்தி Goal போகாதபடி பந்தை (நெடுமாறன்) தடுக்க முயல்கிறார். ஆனால், அந்த பந்து (நெடுமாறன்)  கோலியின் (அமைச்சர் அத்துலத் முதலி) இரு கால்களுக்கும் இடையில் புகுந்து சென்றதாக  அந்த கார்ட்டூன் படம் வரையப்பட்டிருந்தது.

இதனை கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவுக்கு அறிவித்தது. எனினும், இது தொடர்பில் இந்திய மத்திய அரசு அவருக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நெடுமாறன் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் ஏற்பாட்டில் யாழ். பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். 

திலீபன் இச்சந்திப்பை பிரபல கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்தார். அந்த சந்திப்பில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களில் சிலர் எம் மத்தியில் இப்போது இல்லை. அதில் வீரகேசரியின் யாழ்ப்பாண அலுவலக நிருபர் மறைந்த காசி. நவரத்தினமும் சமுகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுமாறன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது கோட்டையில் இருந்த  படையினரின் எறிகணை தாக்குதல்களை நேரில் கண்டார். அப்போது நெடுமாறன் அந்த தாக்குதலில் இறந்தவர்களையும் காயமுற்றவர்களையும் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் உரையாடி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

எறிகணைகள் விழுந்து வெடித்து சேதமடைந்த வீடுகள், வர்த்தக நிலையங்கள், கோட்டையை சூழவுள்ள சேதமான கட்டடங்கள், நூலகம் போன்றவற்றையும் புகைப்படம் எடுத்தார். சில அதிகாரிகளையும் சமூக, மத சான்றோர்களையும் சந்தித்தார். வடக்கின் பல இடங்களுக்கும் நெடுமாறன் அழைத்துச் செல்லப்பட்டார். 

இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் இரவு எறிகணை வீச்சினால், அங்குள்ள மக்கள் அனுபவித்த துன்பங்கள், பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்துகொள்ளும் அவதிகள், இரவில் வேறு இடங்களில் பாதுகாப்பு கருதி தங்குவது, இடம்பெயர்ந்து செல்வது போன்ற ஆபத்தான, பரிதாபமான சூழ்நிலைகளையும் நேரில் கண்டார்.

அதனையடுத்து நெடுமாறன் தமிழகத்துக்கு திரும்பியதும், இராணுவ தாக்குதல்கள் குறித்து தான் நேரில் கண்டவற்றை பத்திரிகைகளுக்கும், தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கும் தெரிவித்தார். அவர் கூறிய விடயங்கள் இந்திய பத்திரிகைகளில் பரபரப்புச் செய்திகளாக வெளிவந்தன.

பழ.நெடுமாறனின் அந்த இலங்கை வருகைக்குப் பின்னர், வடக்கில், கடல் வலய தடைச்சட்டத்தை தீவிரப்படுத்துமாறும், அனுமதியின்றி கடலில் எல்லை கடந்து உட்நு‍ழையும் எந்த படகையும் தாக்கி அழிக்குமாறும் அமைச்சர் லலித் அத்துலத் முதலி கடற்படையினருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தார் என்பது கடந்த கால வரலாற்றுப் பதிவாகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவையின் இறுதிச் சடங்குகளில் வீணான பிரச்சினைகளை...

2025-02-08 16:54:26
news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21