நாட்டுக்காக போராட்டத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும் - கீதா குமாரசிங்க போராட்டக்காரர்களிடம் வலியுறுத்தல்

Published By: Vishnu

08 Mar, 2023 | 06:43 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டை மீண்டும் அதள பாதாளத்திற்குள் தள்ளுவதற்காகவா ஒரு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் இடம்பெறும் வரையிலாவது போராட்டத்தை நாட்டுக்காக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

போராட்டம் தீவிரமடையும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளும் வருகை  தர மாட்டார்கள், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப்பெறாது என மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) புதன்கிழமை இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்பின் நேரடி தாக்கத்தை குடும்ப பெண்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். தமது பிள்ளைகளின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

2020-2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார கொள்கையினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது,இதனை தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களால் தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலைகள்  கட்டம் கட்டமாக    குறைவடைந்து செல்கிறது இதனை குடும்ப பெண்கள் நன்கு அறிவார்கள்.

பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. நாட்டை மீண்டும் அதளபாதாளத்துக்கு தள்ளும் வகையில் ஒரு தரப்பினர் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். 

இவர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்,வரி அதிகரிப்புக்கு எதிராக போராடுபவர்கள் மாதம் இலட்சக்கணக்கில் ஊழியம் பெறுகிறார்கள்.நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்.

போராட்டத்தால் அரசாங்கத்தை மாற்ற முடியாது,ஆகவே ஜனநாயக ரீதியில் தேர்தல் இடம்பெறும் வரை தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தேர்தலில் தமக்கான அரசாங்கத்தை தாராளமாக தெரிவு செய்து கொள்ளலாம்,

நாட்டின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் தற்போது முன்னேற்றமடைந்து வருகிறது,இவ்வாறான சூழலில் நாட்டில் போராட்டம் தீவிரமடைந்தால் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தரமாட்டார்கள், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப் பெறாது,ஆகவே நாட்டை கருத்திற் கொண்டு தொழிற்சங்கத்தினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் போராட்டத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38