வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழர் உரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: Vishnu

08 Mar, 2023 | 06:15 PM
image

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

நல்லிணக்கவாதியாகவும் சமாதானத்தை கர்த்தாவாகவும் தன்னை  உலகுக்கு வெளியில் காட்டிக்கொள்ள ஜனாதிபதி முயற்சித்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் உண்மை நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) புதன்கிழமை இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டார்,

கடந்த அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்காக  ஏனைய நாடுகளை நாட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது.

இந்தப் பின்னணியில் அரசாங்கம் கடனளிப்பவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தனது அரசியல் இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும்  முயற்சிகளை ஜனாதிபதி  முன்னெடுத்துள்ளார்.

ஜனாதிபதி தனது நற்பெயரை மேன்படுத்த முயற்சிக்கின்றார். கடந்த முறை அவர் நல்லிணக்கம் தொடர்பில் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் கூறினார்.

அனைத்து கட்சி மாநாட்டையும் நடத்தி சமாதானத்தை ஏற்படுத்துவபர் போன்று செயற்பட்டார். ஆனால் உண்மையில் அதற்கு எதிரான வகையிலேயே செயற்பாடுகள் நடக்கின்றன. இப்படியிருக்கையில் வெளியில் நல்லிணக்கவாதியாக அவர் தன்னைக் காட்ட முயற்சிக்கின்றார்.

காலனித்துவ ஆட்சி காலத்தில் புராதன இடமாக  அடையாளம் காணப்பட்ட இடம், மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றது.

இராணுவத்தினர் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மறைமுகமான திட்டங்களை மேற்கொள்வதாக கருதுகின்றோம். குரூந்தூர்மலையில் எந்தவித நிர்மாணங்களுக்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

எனினும் அதனையும் மீறி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கு பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. ஆனால் பௌத்தர்கள் அங்கு இல்லை.

மறுபுறம் மட்டக்களப்பில் மயிலத்தமடுவில் கால்நடை மேய்ச்சல் நிலமாக அடையாளம் காணப்பட்ட இடங்களாக 2010 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டது. அமைச்சரவை பத்திரம் ஊடாக அது அடையாளப்படுத்தப்பட்டது. தமிழ் முஸ்லிம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இன ரீதியில் இதனை பிரிக்கின்றனர். மாதுறு ஓயா வலது கரையில் இருக்கும் மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றனர். இதனை நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி முழு உலகுக்கும் சமாதான ஏற்பாட்டாளராக கட்டும் வேளையிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன. இதேவேளை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கின்றனர். 

யாரென்றே தெரியாதவர்கள் அங்குள்ள ஏரிகளில் பண்ணைகளை நடத்தும் நிலைமை காணப்படுகின்றது. மீன்பிடிக்கென அமைச்சர் இருக்கின்றார். வெளிநாட்டு கடற்றொழிலாளர்கள் அங்கு வந்து மீன்பிடிக்க முடியும் என்று கூறுகின்றார். இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இதேவேளை இனவாத நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்கும் போது, அவர்கள் வழங்கும் பணம் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்