சிறுபான்மை மற்றும் இனவாதத்தை விரும்பாத சிங்கள மக்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ 2017 இல் ஆட்சியமைப்போம் என வாய்ச்சவாடல் செய்வதெல்லாம் வெறும் பகல் கனவாகும். அக்கனவை நிறைவேற்றும் பணியை நல்லாட்சி அரசாங்கம் செய்யக்கூடாது. இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் கிராம சுவிசேச திருச்சபையினால் திருச்சபை மக்களின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்துபேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.