இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் தீர்மானம்

Published By: Digital Desk 3

08 Mar, 2023 | 08:52 PM
image

(எம்.மனோசித்ரா)

தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. 

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவிற்கு மத்தியில் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியும் , வட்டி வீதம் மற்றும் வரி என்பவற்றைக் குறைக்குமாறும் வலியுறுத்தி இவ்வாறு தொழிற்சங்க  நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார துற, கல்வித்துறை , பல்கலைக்கழகங்கள், அரச நிர்வாக சேவை, வங்கி, துறைமுகம், பெற்றோலியத்துறை, நீர் வழங்கல் துறை, தபால் சேவை உள்ளிட்ட அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையைச் சேர்ந்த சுமார் 40 தொழிற்சங்கங்கள் கடந்த முதலாம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

8ஆம் திகதிக்குள் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் குறித்த தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன. அதற்கமைய தொழிற்சங்களினால் வழங்கப்பட்ட ஒருவார கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் , அரசாங்கத்தினால் எவ்வித பதிலும் வழங்கப்படாமையினால் இன்றிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட அவை தீர்மானித்துள்ளன.

இதேவேளை நேற்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் தாதிகள் தவிர்ந்த ஏனைய மருத்துவ துறைசார் ஊழியர்கள் ஒரு அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டமையின் காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிர பரவல்:...

2026-08-10 10:10:23
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-08-10 10:01:27
news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை...

2026-08-10 09:58:47
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59