நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் தாக்குதலில் நாம் சம்பந்தப்படவில்லை: உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் 

Published By: Sethu

08 Mar, 2023 | 03:40 PM
image

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்கான நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் கடந்த வரும் வெடித்தமைக்கு உக்ரேனிய ஆதரவு குழுவொன்றே காரணம் என புதிய புலனாய்வுத் தகவல்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது. எனினும் உக்ரேன் இதை நிராகரித்துள்ளது.

பால்டிக் கடலில் பொருத்தப்பட்டுள்ள 'நோர்ட் ஸ்ட்ரீம்- 2' எனும் எரிவாயு வினியோகக் குழாய் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி குண்டுவெடிப்பினால் சேதமடைந்தது. 

இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலவுகிறது.

இதில் சம்பந்தப்பட்ட உக்ரேனிய ஆதரவு குழு எது என்பதையோ புலனாய்வு மூலத்தையோ அப்பத்திரிகை குறிப்பிடவில்லை. ஆனால், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிpர் ஸேலென்ஸ்கி இதில் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரம் அமெரிக்க அதிகாரிகளிடம் இல்லை என அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

எனினும், மேற்கு ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு விநியோகிப்பதன் மூலம் வருமானம் பெறும் ரஷ்யாவின் ஆற்றலை இத்தாக்குதல் பாதித்ததால் இதன்மூலம் உக்ரேனுக்கு நன்மை கிடைத்தது.

அதேவேளை, உக்ரேனிய நட்பு நாடுகளில், குறிப்பாக ஜேர்மனியில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கான அழுத்தத்தை இது ஏற்படுத்தியது.

இந்நிலையில் இத்தாக்குதலின் பின்னணியில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் எதிராளிகள் உள்ளனர் என புலனாய்வுத் தகவல்கள் உணர்த்துவதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இத்தாக்குதலில்  உக்ரேனிய அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒலேக்சி ரேஸ்னிகோவ் இன்று கூறியுள்ளார். சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடனான சந்திப்புக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். 

இத்தாக்குதல் நடவடிக்கைக்கு சுழியோடல் மற்றும் வெடிகுண்டு நிபுணத்துவங்கள் தேவைப்படும் இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யர், இதற்கு ஏற்பாடு செய்தவர்கள்;, பணம் வழங்கியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள்  அமெரிக்க அதிகாரிகளிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவர்கள் உக்ரேன் அல்லது ரஷ்யர்களாக இருக்கலாம் எனவும் அமெரிக்கா அல்லது பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் இல்லை எனவும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது. 

வாடகைப் படகு

இதேவேளை, ஜேர்மனிய ஊடகங்களும் இத்தாக்குதல் தொடர்பான வேறு செய்திகளை வெளியிட்டுள்ளன. 

தாக்குதல் குழுவினர் வாடகைக்கு பெறப்பட்ட படகு ஒன்றை பயன்படுத்தியதாக ஜேர்மனிய அதிகாரிகள் நம்புவதுடன் அப்படகை அடையாளம் கண்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

5 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய தாக்குதல் குழுவினர் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதாக ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவிவித்துள்ளன.

போலந்தை தளமாகக் கொண்ட நிறுவனமொன்றிடமிருந்து இப்படகு வாடகைக்கு பெறப்பட்டதாக ஜேர்மனிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிறுவனம் உக்ரேனியர்கள் இருவருக்குச் சொந்தமானது எனவும் ஜேர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டெம்பர் 6 ஆம்  திகதி ஜேர்மனியின் ரொஸ்டோக் துறைமுகத்திலிருந்து இப்படகு புறப்பட்து.

இப்படகு பின்னர் சுத்தம் செய்யப்படாமல் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதனால்,  அப்படகிலுள்ள மேசையில் வெடிபொருட்களுக்கான தடயங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

அதேவேளை, உறுதியான தகவல்கள் இல்லாதமையினால், உக்ரேனை தொடர்புபடுத்துவதற்காக 'போலியான கொடியின் கீழ்' இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான வாய்ப்பையும் சர்வதேச புலனாய்வு அதிகாரிகள் நிராகரிக்கவில்லை.  

இத்தாக்குதலை நேர்வேயின் உதவியுடன் ஐக்கிய அமெரிக்கா நடத்தியதாக அமெரிக்கப் புலனாய்வு ஊடகவியலாளர் ஷிமோர் ஹேர்ஸ் கடந்த பெப்ரவரி மாதம் குற்றம் சுமத்தியிருந்தாரர். 

இது முற்றிலும் புனைக்கதை என வெள்ளை மாளிகை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17