அதிகரித்து வரும் எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை

Published By: Ponmalar

08 Mar, 2023 | 03:18 PM
image

லுக்கேமியா எனப்படும் ரத்த புற்றுநோய் பாதிப்பிற்கு எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறது. மேலும் எலும்பு மச்சையில் ஏற்படும் தொற்று பாதிப்புகளுக்கும், ஆரோக்கியமான ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இயலாத எலும்பு மச்சைக்கு மாற்றாகவும் எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை அவசியமாகிறது. கடந்த தசாப்தங்களில் பத்து சதவீதமாக இருந்த எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை, தற்போது பதினைந்து சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்றும், ஆண்டுதோறும் உலகளவில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வகை சத்திர சிகிச்சை, ஒருவகையினதான ஸ்டெம் செல் மாற்று சத்திர சிகிச்சை எனவும் குறிப்பிடலாம்.

உங்களுடைய எலும்பு மச்சை திறனுடன் இயங்கி ஆரோக்கியமான ரத்த அணுக்களை உற்பத்தி செய்யவில்லை என மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் நோயாளியின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து பெறப்படும் ஆரோக்கியமான ஸ்டெம் செல்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைகிறது. நெருங்கிய உறவினர்கள் இல்லாத தருணத்தில் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்தும் இத்தகைய ஸ்டெம் செல்கள் பெறப்பட்டு எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

லுக்கேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய், குறை பிரசவத்தில் இரத்த சோகையுடன் பிறக்கும் குழந்தைகள், எலும்பு மச்சை செயலிழப்பு, வளர்ச்சிதை மாற்றத்தின் பிறவி குறைபாடுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கோளாறுகள் என பல நோய் பாதிப்பின் காரணமாக எலும்பு மச்சை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் சரியான சிகிச்சை அளித்து முழுமையான நிவாரணத்தை அளிக்கலாம். இதனை மேற்கொள்ள தவறினால் உடல் உறுப்புகள் செயலிழப்பு, கண்பார்வை திறன் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, தொற்று பாதிப்பு, மகப்பேறின்மை என பல வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

டொக்டர் பிரபு
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04