(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடி உள்ளிட்ட தவிர்க்க முடியாத பல்வேறு காரணிகளால் காலம் தாழ்த்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு நேற்று செவ்வாய்கிழமை மீண்டும் கூடி இந்த தீர்மானத்தை அறிவித்தது.
எனவே தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில அரச அச்சகமா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் ஆணைக்குழு கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தது.
இவ்வாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் , திறைசேரி இது தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM