மதுசார பாவனையால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் : மகளிர் தினத்தில் விசேட ஆய்வு முடிவுகள் 

Published By: Nanthini

08 Mar, 2023 | 01:38 PM
image

லங்கையில் மதுசார பாவனையினால் தினமும் சுமார் 40 பேர் அகால மரணமடைகின்றனர்.

மேலும், பல்வேறு சமூக, பொருளாதார, குடும்ப பிரச்சினைகளையும் மதுசார பாவனை தோற்றுவிக்கிறது. குறைந்த வருமானம் பெறுவோர் மத்தியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான பிரதான காரணம், மதுசார பாவனை என கணிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் தனது வருமானத்தில் 1/3 பகுதியை மதுசாரப் பாவனைக்கு செலவிடுவதால் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கு இப்பாவனை பாரிய தடையாகவும் உள்ளது.

அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்துக்கும் மதுசார பாவனை தடையை ஏற்படுத்துகிறது.

நாட்டுக்கு கிடைக்கப்பெறும் வரி வருமானத்தின் சிறு பகுதியே மதுசார வரியாக கிடைக்கிறது. ஆனாலும், அவ்வரி வருமானத்தை விட மதுசார பாவனையினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளுக்கு அதிகம் செலவிடவேண்டிய நிலைமையே அரசாங்கத்துக்கு காணப்படுகிறது.

ஆகவே, இந்த மதுசாரம், ஒரு நட்டமான சமூகத்துக்கு மேலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உற்பத்திப் பொருளாகும்.

மதுசார பாவனையினால் பாதிக்கப்படும் சமூகத்தில் இப்பிரச்சினைகளுக்கெல்லாம் முகங்கொடுக்கும் பிரதான குழுவினராக பெண்களே காணப்படுகின்றனர். 

ஒரு பெண் குடும்பத்தின் பொறுப்புக்களை தன்னகத்தே கொண்டு வழிநடத்துபவளாக காணப்படுகின்றாள். 

பல குடும்பங்கள் இணைந்தே ஒரு சமூகம் உருவாகிறது. ஒரு குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினை ஒரு சமூகத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். 

கணவர் மதுசாரம் அருந்தும் ஒருவராக இருப்பின், வீட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, இதனால் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் மன உளைச்சலும் ஏற்படுகின்றன. 

மேலும், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அக்குடும்பத்தின் மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியன பறிபோன நிலையில் ஓர் இருண்ட வாழ்க்கையையே அதிகமான பெண்கள் வாழ்கின்றனர் என்பது புலப்படுகிறது.

எமது நாட்டில் ஆண்களின் மதுசார பாவனையே அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக, 35 வீதமான ஆண்கள் மதுசார பாவனையில் ஈடுபடுகின்றனர். பெண்களின் மதுசார பாவனை புறக்கணிக்கத்தக்க அளவிலேயே உள்ளது.  ஆனால், மதுசார பாவனையினால் ஏற்படும் 90 வீதமான பிரச்சினைகளுக்கு பெண்களே முகங்கொடுக்கின்றனர்; பெண்களே பாதிப்புகளையும் அனுபவிக்கின்றனர். 

ஆண்களின் மதுசார பாவனை, பெண்கள் மீது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? 

மதுசார பாவனையை குறைக்கும்போது பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியுமா என்கிற கருத்துக்கணிப்பொன்று 100 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

அக்கருத்துக்கணிப்பின் முடிவுகள் பின்வருமாறு:

வரைபு 1: இக்கருத்துக் கணிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வயதினர்

வரைபு 2: தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் கல்வி நிலை

வரைபு 3: பெண்கள் ஏதேனும் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனரா?

பெண்கள் ஏதேனுமொரு பிரச்சினைக்கு ஆளாகின்றனர் என 88.2% வீதமானோர் தெரிவித்தனர்.

வரைபு 4: பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மதுசாரம் எந்தளவு தாக்கம் செலுத்துகின்றது?

பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மதுசாரம் அதிகளவு தாக்கம் செலுத்துகிறது என 78.8% வீதமானோர் தெரிவித்திருந்தனர்.

வரைபு 5: மதுசார பாவனையினால் எவ்வாறான பிரச்சினைகளுக்கு பெண்கள் முகங்கொடுக்கின்றனர்?

மதுசார பாவனையினால் பொருளாதார பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர் என 54 வீதமானோரும், பிள்ளைகளின் கல்வி நிலை பாதிப்படைகிறது என 32.5 வீதமானோரும், பல்வேறு வன்முறைக்கு பெண்கள் ஆளாகின்றனர் என 40 வீதமானோரும், வீட்டின் மகிழ்ச்சி இல்லாமல் போவதால் பெண்கள் பாதிக்கப்படுவதாக 27.7 வீதமானோரும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என 43.4 வீதமானோரும் தெரிவித்திருந்தனர்.

வரைபு 6: ஆண்களின் மதுசார பாவனையை குறைக்கும்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியுமா?

இக்கருத்துக்கணிப்பின் பிரதான முடிவாக, ஆண்களின் மதுசார பாவனையை குறைக்கும் போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியும் என 97.6 வீதமானோர் தெரிவித்திருந்தனர்.

பெண்கள் படும் துன்பங்களுக்கு மதுசார பாவனை காரணம் என 78.8 வீதமான பெண்கள் குறிப்பிட்டிருந்ததுடன், 97.6 வீதமான பெண்கள் மதுசார பாவனையை குறைத்தால் பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தனர். 

ஆகவே, இந்த மகளிர் தினத்திலேனும் பெண்களை மதிக்கும் ஒவ்வொருவரும் இதனை சிந்தித்து, பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் பிரச்சினைகளை குறைப்பதற்கு முன்வர வேண்டும். 

மேலும், பெண்கள் தினமும் இதுபோன்று மதுசார பாவனையினால் ஏற்படும் பிரச்சினைகளை தாங்கிக்கொண்டு துன்பப்படாமல், குறித்த சந்தர்ப்பத்தில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி தமது மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கு வலுப்பெற வேண்டும்.

(தகவல்: மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கவே...

2023-06-04 18:17:23
news-image

திறக்கப்படாத புதுடில்லி கதவு

2023-06-04 18:53:26
news-image

செங்கோல் ஏந்திய இந்திய புதிய பாராளுமன்றம்...

2023-06-02 14:15:30
news-image

மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - உடலையாவது...

2023-06-03 15:10:40
news-image

கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் பொருளாதார...

2023-06-02 21:15:04
news-image

திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி

2023-06-02 10:19:49
news-image

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...

2023-06-02 09:16:45
news-image

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

2023-06-01 15:31:15
news-image

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...

2023-06-01 14:44:30
news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50