'லால் சலாம்' படப்பிடிப்பு ஆரம்பம்

Published By: Ponmalar

08 Mar, 2023 | 01:06 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கும் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கிய நட்சத்திர வாரிசும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'லால் சலாம்'. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என்பதை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு,  தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்குவதாலும், சர்வதேச மகளிர் தினத்தன்று படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதாலும் லால் சலாம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37