ரகுமான் நடிக்கும் 'ஓபரேசன் அரபைமா' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Ponmalar

08 Mar, 2023 | 03:22 PM
image

நடிகர் ரகுமான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஓபரேசன் அரபைமா' எனும் திரைப்படம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளிலும் பணியாற்றி விமான விபத்தில் உயிர்பிழைத்த ராணுவ வீரர் பிரசாந்த் எனும் பிராஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் 'ஓபரேசன் அரபைமா'. இதில் ரகுமான், மலையாள நடிகர் டினி டோம், ஷிஹாத், நடிகைகள் நேஹா சக்ஸேனா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபெனிக்ஸ் உதயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராகேஷ் பிரம்மாநந்தன் இசையமைத்திருக்கிறார்.  பாடலாசிரியர் முருகன் மந்திரம் வசனம் எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தை டைம் அண்ட் டைட் ஃபிலிம்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. டுபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயின் ஜோர்ஜ் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பணிகள், கொரோனாத் தொற்று காரணமாகவும், நிஜ போர்க் கப்பலில் படப்பிடிப்பு  நடத்தப்பட்டதன் காரணமாகவும் காலதாமதமாகி தற்போது இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் பங்கு பற்றினர்.

இதன்போது பேசிய இயக்குநர், “இந்திய கடலோர காவல் படையில் அதிகாரியாக பணிபுரிந்த நான் விமானப்படை மற்றும் தரைப்படையில் பணியாற்றும் வாய்ப்பினையும் பெற்றேன். இந்திய கடற்படையில் பணியாற்றியபோது இந்திய பெருங்கடலில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகள் இணைந்து போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எதிர்கால இளைய சமுதாயத்தின் மனித வளத்தை  சீரழிக்கும் வகையிலான போதை மருந்து பாவனையை தடுக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்தமான், டுபாய் உள்ளிட்டபதினேழிற்கும் மேற்பட்ட கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் பயன்பாட்டில் இருக்கும் நிஜ போர்க்கப்பலில் படப்பிடிப்பை நடத்தினோம். கப்பற்படையினர், நடுகடலில் போதை மருந்தை கடத்தி வரும் கப்பலை வழிமறித்து அதனை அழிக்கும் காட்சி.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். மேலும் பெண்களும் போதை மருந்துக்கு எதிராக முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்து வகையிலும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறன. இந்த சமூகத்தில் புறக்கணிப்பிற்குள்ளாகி இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்கள்.. இத்தகைய கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்பதால், அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45