சுகாதாரத் தொழிற்சங்கத்தின் ஒருநாள் அடையாள பணிபகிஸ்கரிப்பு வவுனியாவில் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்டு நாடளாவிய ரீதியில் குறித்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டதுடன், தொழிற்சங்கத்தினை சார்ந்த உறுப்பினர்கள் சுகவீன விடுப்பினை பெற்று பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகளை தவிர்ந்த ஏனைய சேவைகளில் தொய்வு நிலை ஏற்பட்டிருந்தது.
வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த போராட்டம் இன்று புதன்கிழமை காலை 6.30 முதல் நாளை காலை 6.30 வரையான காலப்பகுதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM