உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சர்வதேச மகளிர் தினத்தையொட்டி காத்தானகுடி இஸ்லாமிய இலக்கிய கழகம் ஏற்பாடு செய்த தமிழ், முஸ்லிம் பெண் ஆளுமைகள் கௌரவிப்பும் விசேட மகளிர்தின கவியரங்கும் கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் காத்தான்குடி கலாநிதி அலவி சரிபுத்தீன் முன்னோடிகள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா சபீன் காத்தான்குடியின் முதல் பெண் இலிகிதர் திருமதி பரீனா றூஹூல்லாஹ், காத்தான்குடியின் முதல் பெண் நூலகர் திருமதி ஹமீதா சுபைர், இன்றைய காத்தான்குடி பொது நூலக பிரதம நூலகர் திருமதி கமலினி புஸ்பராஜா ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி எம்.எம்.ஹாரீஸ் மதனி கழகத்தின் செயலாளர் கலாபூசணம் காத்தான்குடி பாத்திமா உட்பட பலர் அத்திகளாகக் கலந்து கொண்டனர்.
கவிக்கோன் இல்மி அஹமட்லெப்பை தலைமையில் 11 ஆண், பெண் கவிஞர்கள் சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களைப் போற்றி கவிதை பாடினர். கவிஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM