யாழ். கல்லூரியை மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகொண்டு வரலாறு படைத்தது சென் பெற்றிக்ஸ்

Published By: Digital Desk 5

08 Mar, 2023 | 12:37 PM
image

(என்.வீ.ஏ.)

பொன் அணிகளின் கிரிக்கெட் சமரில் தனது எதிரணியான யாழ்ப்பாணம் கல்லூரி அணியை  இந்த வருடம்   மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகொண்டதன் மூலம் சென் பெற்றிக்ஸ் கல்லூரி அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.

பொன் அணிகளின் சமர் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியிலும் பின்னர் ராஜன் கதிர்காமர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் யாழ்ப்பாணம் கல்லூரியை வெற்றிகொண்டிருந்த சென் பெற்றிக்ஸ், செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டி முழுமையான வெற்றியை நிறைவுசெய்தது.

இருபது 20 கிரிககெட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்தை சென் பெற்றிக்ஸ் சுவீகரித்தது.

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 87 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் பெற்றிக்ஸ் கல்லூரி அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான ஐ. ஜெஸ்டிகன் 2 ஓட்டங்களுடன் 3ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தபோது சென் பெற்றிக்ஸின் மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் மற்றைய ஆரம்ப வீரர் எம். சௌதியன்,  3ஆம் இலக்க வீரர் பற்குணம் மதுஷன் ஆகிய இருவரும் இணைந்து பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 47 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து சென் பெற்றிக்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக ஈட்டிக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் அசத்திய சௌதியன் 42 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 69 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.

பி. மதுஷன் ஆட்டம் இழக்காமல் 8 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் எஸ். மதுஷன் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணம் கல்லூரி அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பொறுப்பற்ற துடுப்பாட்டம், அவசரத் துடுக்கை ஆகியனவே யாழ்ப்பாணம் கல்லூரி அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 4 வீரர்கள் அநாவசியமாக தங்களது விக்கெட்களை ரன் அவுட் முறையில் இழந்தனர்.

துடுப்பாட்டத்தில் பி. பிருந்தன் (28), ஐ. எமெக்சன் (14), எஸ். நர்த்தனன் (10) ஆகிய மூவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

திறமையாக பந்துவீசிய எஸ். சமிந்தன் 3 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: எம். சௌதியன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41