சிரியாவின் அலேப்போ விமான நிலையத்தில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்

Published By: Sethu

07 Mar, 2023 | 06:20 PM
image

சிரியாவின் அலேப்போ நகரில் இஸ்ரேலிய யுத்த விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளன.

சிரியாவின் 2 ஆவது பெரிய நகரான அலேப்போ கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினாலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் அங்கு தாக்குதல் நடத்தியதாக சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

லட்டேக்கியா பிராந்தியத்தின் மேற்கு பகுதியில், அலேப்போ சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து, அதிகாலை 2.07 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

 இத்தாக்குதல் காரணமாக அலேப்போ நகருக்கான விமான சேவைகளும் நிறுத்தப்பட்டதாக சிரிய போக்குவரத்து அமைச்சு தெரவித்துள்ளது.  

பூகம்பத்தினால் சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கான முக்கிய விமான நிலையமாக அலேப்போ விமான நிலையம் விளங்கியது. 

'கடந்த மாதம் உதவிப்பொருட்களுடன் 80 விமானங்கள் அலேப்போவில் தரையிறங்கின. தற்போது விமான நிலையத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் திருத்தப்படாமல் விமானப் பயணங்கள் இடம்பெறுவது சாத்தியமில்லை என சிரிய போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் சுலைமான் கலீல் கூறினார்.

உதவிப் பொருட்களுடன் வரும் அனைத்து விமானங்களும் டமஸ்கஸ் மற்றும் லட்டாகியா விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்படுகின்றன என சிரிய போக்குவரத்து அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சிவில் விமான நிலையமொன்றை, இலக்குவைத்து தாக்குதல் நடத்தியமையும், பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான மனிதாபிமான சேவைக்கு பயன்படுத்தப்படும் விமான நிலையத்தை,  இலக்குவைத்தமை இரட்டைக் குற்றம் என சரிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவப் பேசச்hளர் ஒருவர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார் என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48
news-image

அசாம் சுரங்க விபத்தில் 4 உடல்கள்...

2025-01-12 10:04:22
news-image

தமிழ்நாடு - பினாங்கு மாநிலங்களின் வீட்டு...

2025-01-11 17:01:55
news-image

டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை...

2025-01-10 16:14:47
news-image

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது...

2025-01-10 12:53:11
news-image

ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகு...

2025-01-10 12:04:33