கேரட்டை இசைக்கருவியாக மாற்றிய அவுஸ்திரேலிய இசைக்கலைஞர்

Published By: Digital Desk 3

07 Mar, 2023 | 04:49 PM
image

இசையால் உலகை வெல்லலாம் என்பது சாத்தியமே. அதுபோன்று எங்கும் இசை எதிலும் இசை என்பதும் சாத்தியமே. 

அதனை நிரூபிக்கும் வகையில்,  அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த  இசைக்கலைஞர் ஒருவர் கேரட்டை கிளாரினெட் இசைக்கருவியாக மாற்றி அதில் அபாரமான இசையை வாசித்துள்ளார்.

இந்த காணொளியை இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், எல்லோரும் எல்லாவற்றிலும் இசையைக் கண்டுபிடிக்கவும்  என பதிவிட்டுள்ளார்.

இது தற்போது இணையத்தில் வைராகி வருகிறது.

2 நிமிடக் காட்சியில், லின்சே பொல்லாக் என்ற அவுஸ்திரேலிய இசைக்கலைஞரே கேரட்டை கிளாரினெட்டாக மாற்றியுள்ளார்.

இந்த காணொளி இணையத்தில் பகிரப்பட்ட பிறகு 68,000 பேர் பார்த்துள்ளனர். ட்விட்டர் பயனர்கள் காணொளியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர் மற்றும் இசைக்கலைஞரைப் பாராட்டியுள்ளனர்.

"ஒரு தலைசிறந்த கைவினைஞர் தன்னிடம் உள்ள எதையும் கொண்டு வேலை செய்ய முடியும். என்ன ஒரு சிறந்த உதாரணம்" என தெரிவித்துள்ளார்.

மற்றொருவர ,"அற்புதமான செயல்திறன். என்ன ஒரு யோசனை." என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்