எம்மில் பலரும் பசியாறும்போது உணவை விழுங்குவதில் தடுமாற்றம் அல்லது சிரமம் அல்லது அசௌகரியம் ஏற்படலாம். சிலருக்கு இந்த பாதிப்பு உடனடியாக தன்னிச்சையாக சரியாகும். சிலருக்கு இதன் காரணமாக திட மற்றும் திரவ உணவுகளை விழுங்குவதில் கடும் சிரமம் உண்டாகும். வேறு சிலருக்கு இத்தகையத் தருணத்தில் வலியும் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது POEM எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
விழுங்க இயலாத நிலை, விழுங்கும்போது வலி, உணவு தொண்டை, மார்பு, மார்பகத்தின் பின்பகுதி ஆகியவற்றில் சிக்கி இருப்பது போன்ற உணர்வு, பேசுவதில் தடை, உணவு எதுகளித்தல், நெஞ்செரிச்சல், வயிற்றிலிருந்து அமிலம் கலந்த உணவு தொண்டைக்குள் வருவது, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவை டிஸ்ஃபேஜியா எனப்படும் உணவை விழுங்குவதற்கான பாதிப்பு என அறிந்து கொண்டு, அதற்குரிய ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
பொதுவாக டிஸ்ஃபேஜியா எனப்படும் இத்தகைய பாதிப்பு, Esophageal Dysphagia மற்றும் Oropharyngeal Dysphagia என இரண்டு வகையாக மருத்துவர்கள் வகைப்படுத்துகிறார்கள். அதாவது உணவு குழாய் மற்றும் தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளை வகைப்படுத்தி, அதற்குரிய முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறார்கள். இத்தகைய பாதிப்பு பொதுவாக வயதானவர்களிடத்தில் காணப்படுகிறது என்றாலும், தற்போதுள்ள வேகமான உணவு முறை மாற்றத்தின் காரணமாக வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உணவு குழாய் மற்றும் தொண்டை உள்ள தசைப்பகுதிகளில் ஏதேனும் பலவீனம் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் வீக்கம் ஏற்படுகிறதா? என்பதனை பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானிக்கிறார்கள். இதன்போது பேரியம் எக்ஸ்ரே, எண்டோஸ்கோபி, பைபர் ஓப்டிக் எண்டோஸ்கோபி, மேனோமேட்ரி மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளின் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கான முதன்மையான நிவாரண சிகிச்சையை வழங்குகிறார்கள். வெகு சிலருக்கு மட்டுமே அங்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும். இந்த தருணத்தில் POEM ( Peroral Endoscopic Myotomy) எனும் சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது. இதன் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட இயலும்.
டொக்டர் வேணுகோபால்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM