தேர்தலுக்கான தினத்தை அறிவிப்பதில் தொடர்ந்தும் இழுபறி ; ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் கலந்துகொள்ளாத பொலிஸ்மா அதிபர், திறைசேரி செயலாளர்

Published By: Vishnu

08 Mar, 2023 | 12:20 AM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (07) மீண்டும் கூடியது. இவ்வாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இம்மாதம் 9ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் , அன்றைய தினத்தில் தேர்தலை நடத்த முடியாது என ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது. 

இந்நிலையில் தேர்தலுக்கான புதிய தினத்தை தீர்மானிப்பதற்காக கடந்த 3ஆம் திகதி ஆணைக்குழு கூடிய போதிலும் அன்றும் தினமொன்று நியமிக்கப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையால் அன்று தேர்தலுக்கான தினம் தீர்மானிக்கப்படவில்லை. 

அத்தோடு குறித்த மனு மீதான விசாரணைகளின் பின்னர் வரவு - செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே தேர்தலுக்கான தினம் குறித்து தீர்மானிப்பதற்கு ஆணைக்குழு இன்று (07) மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே மாத்திரம் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த நிலையில் , திறைசேரி செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருக்கவில்லை. எனினும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சிலர் ஆணைக்குழுவிற்கு சமூகமளித்திருந்தனர்.

பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தமையால் தன்னால் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாது என்றும் , எனவே பிரிதொரு தினத்தை வழங்குமாறும் திறைசேரி செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். 

அதற்கமைய கலந்துரையாடலுக்கு பிரிதொரு தினத்தை வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடத் தேவையான நிதி குறித்து திறைசேரிக்கு அறிவிக்குமாறு எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதே போன்று அதற்கான பாதுகாப்புக்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலுக்கான தினத்தை அறிவிப்பதற்கு ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும். 

பாதுகாப்பினை வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஆணைக்குழு அறிவிக்கும் தினத்தில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரவின் கொழும்பில்...

2024-10-14 00:14:51
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11