(எம.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் கடமையில் இருந்து விலகுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கும் தீர்மானம் ஏதும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை. தவறான அறிவிப்பை பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அக்கணமே திருத்திக் கொண்டார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் தடையேற்படுத்தவில்லை. உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை இருபத்தேழு,இரண்டின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும்கூறுகையில்;
தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் கூடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றதாகும்.ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை தேசிய பாதுகாப்பு சபை கூடுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தன்மையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் சபைக்கு தெளிவுப்படுத்தினார்.
திறைச்சேரியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்வதை தடுப்பதற்காகவே அவர் தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுவதும் அடிப்பமையற்றதாகும். தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை மறுக்க முடியாது.
தேர்தல் ஆணைக்குழு விடுத்த அழைப்பு தொடர்பில் திறைச்சேரியின் செயலாளர் ஆணைககுழுவுடன் பேசி ஒரு தீர்மானத்தை எடுப்பார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் என்ற ரீதியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். தேர்தல் திருத்தச்சட்டம்,தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பல யோசனைகளை முன்வைத்துள்ளது. சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கட்டுப்பணம் ஏற்றல் பணியில் இருந்து மாவட்ட செயலாளர்களை விலகிக் கொள்ளுமாறு அறிவிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கவில்லை.தவறுதலாக வெளியிட்ட அறிக்கையை பொதுநிர்வாக அமைச்சர் மறுகணமே திருத்திக்கொண்டார்.தேர்தல் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM