சிலம்பரசனின் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published By: Ponmalar

07 Mar, 2023 | 02:26 PM
image

சிலம்பரசன் கதையின் நாயகனாக நடித்து வரும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் என். கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பத்து தல'. இதில் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டிஜே அருணாச்சலம், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாரூக் ஜே. பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் ஜெயந்திலால் காடா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் பதினொரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை திருமதி சாயிஷா ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. இதனைல் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் கிருஷ்ணா பேசுகையில், “முஃப்தி எனும் கன்னட படத்தின் ரீமேக் என்றாலும், தமிழ் சூழலுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களை செய்து 'பத்து தல' படத்தை உருவாக்கி இருக்கிறோம். தற்போது சிலம்பரசன் தற்காப்பு கலை ஒன்றை பயில்வதற்காக தாய்லாந்து நாட்டில் முகாமிட்டிருக்கிறார். இந்த பயிற்சி இம்மாதம் 15ஆம் திகதியன்று நிறைவடைகிறது. அதன் பிறகு தாயகம் திரும்பியவுடன் இப்படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறும். மேலும் இந்த திரைப்படத்திற்காக திருமதி சாயிஷா ஆர்யா ஒரேயொரு பாடலுக்கு நடனமாடுகிறார். அதற்கான படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்திருக்கிறது.. இந்தப் படம் மார்ச் 30ஆம் திகதியன்று வெளியாகிறது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45