பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்­தலைவர் அஸார் அலியின் இரா­ஜி­னாமாவை பாகிஸ் தான் கிரிக்கெட் சபையின் தலைவர் சகா­ரி­யார்கான் நிரா­க­ரித்­துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் மொஹமட் அமீர் 2010ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் நடை­பெற்ற லோட்ஸ் டெஸ்ட் போட்­டியின் போது சூதாட்­டத்தில் ஈடு­பட்­டமை நிரூ­பிக்­கப்­பட்டு சர்­வ­தேச கிரிக்கெட் சபை­யினால் ஐந்து ஆண்­டுகள் தடை­வி­திக்­கப்­பட்­டது. அத­னைத் ­தொடர்ந்து

கடந்த ஜன­வரி மாதம் அவருடைய தடை விலக்கப்பட்டு உள்ளூர் போட்டியில் விளை யாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையால் அனுமதிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் பயிற்சி முகாமில் அமீர் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இதற்கு மொஹமட் ஹபீஸ், அணித்தலை வர் அஸார் அலி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அஸார் அலி தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்து கடிதமனுப்பினார்.

இந்நிலையில் நேற்றையதினம் கிரிக் கெட் சபைத் தலைவருடன் இணைந்து அஸார் அலி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற் றார். அதன்போது அவருடைய இராஜினாமாவை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தொடர்ந்தும் அணித்தலைவராக அஸார் நீடிப்பாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.