பியூஸ்லஸ் ஞாபகார்த்த கிண்ணத்தை ஐக்கிய விளையாட்டுக் கழகம் சுவீகரித்தது

Published By: Digital Desk 5

07 Mar, 2023 | 12:43 PM
image

(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்  )

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட சாதனை நாயகன், முன்னாள் தேசிய வீரர் டக்சன் பியூஸ்லஸின் முதலாம் வருட ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஜோசப் வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

மன்னார் கால்பந்தாட்ட லீக் அனுசரனையுடன் மாந்தை  பிரதேச விளையாட்டு மைதானத்தில் இப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த சுற்றுப் போட்டியில் மாவிலங்கேணி அலோசியஸ் அணியை 5 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் ஐக்கிய விளையாட்டுக் கழகம் இலகுவாக வெற்றியீட்டியது.

தொடர்ந்து கால் இறுதிப் போட்டியில் உப்புக்குளம், அல்பதா அணியை  2 – 0  என்ற கோல்கள்  அடிப்படையிலும் அரை இறுதியில் எமில் நகர் இருதயநாதர் 4 – 0 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

திங்கட்கிழமை (06) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பனங்கட்டிக்கொட்டு சென். ஜோசப் அணியும்  ஜோசப் வாஸ் நகர்  ஐக்கிய விளையாட்டு கழக அணியும் மோதின.

ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றி அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 7 – 6 என ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று அங்குரார்ப்பண பியூஸ்லஸ் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35