மக்கள் வங்கியின் வனிதா வாசனா மூலமாக சேமித்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்

Published By: Digital Desk 5

07 Mar, 2023 | 11:16 AM
image

பெண்கள் தமது வீட்டையும் குடும்பத்தையும் வளர்ப்பதாக இருந்தாலும் அல்லது ஒரு தலைவராகவும், முதலீட்டாளராகவும் மற்றும் முடிவெடுப்பவராகவும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உழைத்தாலும், சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பன்முக பாத்திரங்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்கு அயராது பங்களிக்கும் இலங்கைப் பெண்களுக்கு, மக்கள் வங்கி இச்சர்வதேச மகளிர் தினத்தில் உலகத்துடன் இணைந்து கௌரவம் செலுத்துகிறது.

பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வங்கிச் சேவைகள் குறித்து மக்கள் வங்கியின் தனிநபர் வங்கிச்சேவையின் பிரதிப் பொது முகாமையாளரான ரேணுகா ஜயசிங்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், 'மக்கள் வங்கியானது 1993 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எமது 'வனிதா வாசனா” சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியது. 

பெண்கள் தங்கள் சேமிப்பை அதிகரிக்க வாய்ப்பு வழங்குவதே இதன் குறிக்கோளாக இருந்தது. மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்கு என்னவெனில், இந்த ஆண்டு ‘வனிதா வாசனா’ சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு முப்பது ஆண்டுகள் நிறைவடைகிறது.

மக்கள் வங்கியில் நாம் ‘வனிதா வாசனா’ கணக்கை ஆரம்பித்த போது, இலங்கையில் பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்திய முதல் வங்கியாக நாங்கள் இருந்தோம் என்பதை பெருமையுடன் கூறுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

 “இந்த ஆண்டு மக்கள் எதிர்கொள்ளும் நிதி சவால்களை அறிந்து, வனிதா வாசனாவின் அம்சங்களை மேம்படுத்தி, இது போன்ற சவால்களை சமாளிக்க நம் நாட்டு பெண்களுக்கு கைகொடுக்கும் வகையில் ‘வனிதா வாசனா உயர் வட்டி’ சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளோம். ‘வனிதா வாசனா உயர் வட்டி’ சேமிப்புக் கணக்கு, 12% வரையிலான நிகரற்ற வட்டி வீதம் மற்றும் கடன் வசதிகளுடன் நெகிழ்வான மற்றும் பாதுகாப்பான முதலீடாகும். மேலும், ஒவ்வொரு புதிய கணக்கை ஆரம்பிக்கும் போதும், நாங்கள் மக்கள் வங்கியிடமிருந்து பரிசொன்றைப் பெற்றுக்கொள்வீர்கள்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், ‘வனிதா வாசனா’ கணக்கிற்கு சமாந்தரமாக இயங்கும் ‘வனிதா வாசனா பண திட்டமிடல் புஞ்சி சீட்டு’ முதலீட்டு வாய்ப்பை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களிடையே சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்க இந்த முயற்சி தொடங்கப்பட்டது. ரூபா. 25,000, ரூபா. 50,000 ; ரூபா. 100,000, ரூபா. 250,000 அல்லது ரூபா. 500,000 ஆரம்ப முதலீட்டில் ‘வனிதா வாசனா பண திட்டமிடல் புஞ்சி சீட்டு’ கணக்கினை ஆரம்பிக்கலாம்.  ஆண்டுதோறும் சேமிக்கப்படும் தொகையின் அடிப்படையில் நாங்கள் 10.5% வட்டி வீதத்தைப் பெறுவீர்கள். 

மேலும், சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்படும் கணக்குகள், இணைய வழி கொள்முதல் உட்பட, முன்னணி

மூக்குக்கண்ணாடியகங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், நகைக்கடைகள், பீங்கான் பொருட்கள் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஆய்வுகூட சேவைகள் என பல பரிசுகள் மற்றும் தள்ளுபடிகளுக்கு தகுதி பெறும்.

 ‘வனிதா வாசனா’ கணக்கு வைத்திருப்பவர்கள், மக்கள் வங்கியின் ‘சுவர்ண பிரதீபா அடகுச் சேவை’ க்கான வட்டியில் 0.5% குறைப்பைப் பெறுவார்கள்.

மக்கள் வங்கிக்கு நாடளாவிய ரீதியில் 743 கிளைகள் மற்றும் சேவை நிலையங்களைக் கொண்டுள்ளதுடன், மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். 61 ஆண்டுகால பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ள மக்கள் வங்கி, 14.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து, 19 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் உறவுகளைப் பேணுவதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய நிதிச் சேவை வழங்குனராக விளங்குகிறது.

படம்: ரேணுகா ஜயசிங்க, பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை), மக்கள்

வங்கி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'சூர்யா'வுக்கான வர்த்தக நாமத் தூதுவராக இலங்கை...

2023-03-23 15:05:01
news-image

கடல் சுத்திகரிப்புத் திட்டத்தினூடாக தூய்மையான இலங்கையை...

2023-03-23 10:52:04
news-image

மக்கள் வங்கிக்கு சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள்...

2023-03-20 16:26:13
news-image

Daraz Express இனூடாக பெண் ஓட்டுநர்களின்...

2023-03-18 16:53:49
news-image

தனது நிலையான பயணத்தை தொடரும் அமானா...

2023-03-17 11:16:17
news-image

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையில்...

2023-03-15 17:19:59
news-image

மக்கள் வங்கியின் வனிதா வாசனா மூலமாக...

2023-03-07 11:16:52
news-image

கல்வி அமைச்சு மற்றும் Microsoft இணைந்து...

2023-03-07 11:46:52
news-image

வளர்ந்துவரும் இளம்தொழில் வல்லுநர்கள் நவீன மற்றும்...

2023-03-07 11:47:17
news-image

2022 ஆண்டிற்கான சிறந்த பெறுபேறுகளை பான்...

2023-02-28 11:36:32
news-image

சன்குயிக் ரெடி டு டிறிங்க் தொழிற்சாலையினை...

2023-02-27 14:34:37
news-image

"தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய்...

2023-02-27 11:28:32