இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்புள்ளிகளான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, குடு சாலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன ஆகியோர் மடகஸ்கார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து உட்பட 8 பேர், மடகஸ்காரின் தலைநகர் அன்டனானாரிவோவின் இவாட்டோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டனர் என எல்.எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
ஹரக் கட்டாவின் மனைவி எனக் கூறப்படும் மடகாஸ்கர் பெண்ணொருவரும், அப்பெண்ணின் தந்தையும் கைதானவர்களில் அடங்குவர் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஹரக் கட்டா குடு சலிந்து உட்பட 6 இலங்கையர்கள் கைதாகியுள்ளனர்.
ஹரக் கட்டா உட்பட ஐவர், கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி மடகாஸ்கரின் சுற்றுலா தீவான நோசி பேவில் வி பிரத்தியேக ஜெட் விமானம் ஒன்றின் மூலம் வந்திறங்கினர் எனத் தெரிய வருவதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது, மறுநாள் உள்ளூர் விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் அன்டனானாரிவோ நகரை சென்றடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவாட்டோ நகரிலுள்ள பெரிய ஹோட்டலொன்றிலும் அபோஹிமங்காகேலி நகரிலுள்ள ஹோட்டலொன்றிலும் இவர்கள் தங்கியிருந்தனர்.
பின்னர், கடந்த முதலாம் திகதி மககாஸ்ரிலிருந்து வெளியேறுவதற்காக அன்டனானாரிவோவின் இவாட்டா விமான நிலையத்துக்கு இரு கார்களில் வந்தனர்.
இதன்போது, இந்நபர்கள் தேடப்படும் அறிவித்தல் அதிகாரிகளுக்கு கிடைத்திருந்த நிலையில். இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி கார்கள் மற்றும் சந்தேக நபர்கள் வசமிருந்த தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM