பிரபஞ்சமும் இறை சக்தியும் என்னை ஊடக கருவியாக பயன்படுத்துகின்றன - எண் ஜோதிட நிபுணர் மற்றும் கல் ஆராய்ச்சியாளர் டி.கே.

Published By: Nanthini

06 Mar, 2023 | 07:04 PM
image

(சந்திப்பு: சுபயோக தாசன்)

ன்றைய திகதியில் எம்மில் பலரும் பல தடைகளை கடந்து வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வழியில் முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தெரிவுசெய்யும் முதன்மையான வழி, ஜோதிட நிபுணர்களின் வழிகாட்டல் ஆகும். 

எம்மில் ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவரை தெரிவுசெய்வது போல், வாழ்க்கை முழுவதும் சோதனையான தருணங்களில் சரியான திசையில் வழிநடத்துவதற்காக சோதிடத்திலும் ஆன்மிகத்திலும் ஆழ்ந்த அனுபவம் கொண்ட ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்பது  வழக்கம்.

தற்போதுள்ள சூழலில் மருத்துவத்தில் எப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் வெவ்வேறு நிபுணர்கள் இருக்கிறார்களோ, அதேபோல் சோதிடத்திலும் பல்வேறு வகையான நிபுணர்கள் இருக்கின்றனர். 

பாரம்பரிய சோதிட வல்லுநர்கள், வாழ்வியல் பரிகார சோதிட நிபுணர்கள், ஆலய பரிகார சோதிட நிபுணர்கள், தாந்திரீக பரிகார ஜோதிட நிபுணர்கள், யாகம், ஹோமம், அன்னதானம் உள்ளிட்ட பரிகாரங்களை முன்னிறுத்தும் ஜோதிட நிபுணர்கள், எண் கணித நிபுணர்கள்... என ஏராளமான சிறப்பு ஜோதிட நிபுணர்கள் இருக்கிறார்கள். 

அந்த வகையில் எண் கணித நிபுணரும் பரிகார கல் ஆராய்ச்சியாளருமான டி.கே (DK) அவர்களை வீரகேசரி இணையதளத்தினூடாக சந்தித்தோம்.

கேள்வி: வணக்கம். உங்களுடைய ஜோதிட பாணி என்ன?

பதில்: நேரில் சந்தித்தாலோ அல்லது தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டாலோ நான் பயனாளியிடம் கேட்பது, அவர்களின் பெயர் மற்றும் அவர்களின் பிறந்த திகதி ஆகியவற்றையே ஆகும். 

இந்த இரண்டை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்களுக்கான பலன்களையும், பலன் பெறுவதற்கான பரிகார முறைகளையும் சொல்கிறேன். 

பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய இரண்டின் கூட்டு எண்களில் உள்ள அதிர்வுகளையும் மற்றும் அதிர்வலைகளையும் பட்டியலிடுகிறேன். பிறகு அவற்றுக்கு இடையேயான பொருத்தமான நிலை மற்றும் பொருத்தமற்ற நிலையை வகைப்படுத்துகிறேன். அதன் பின்னர் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து அவதானிக்கிறேன். 

மேலும், அவர்களின் வாழ்வியல் வெற்றிக்கான சூட்சும எண்ணை கண்டறிகிறேன். 

அதனை தொடர்ந்து அவர்களிடம் சில பெயர்களை கூறி, அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரிப்பவர்கள், அறிந்தவர்கள், உதவி புரிபவர்கள் பற்றி கூறி, அவர்களது பதிலைக் கேட்கிறேன். 

பிறகு அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள், அதற்கான காரணகர்த்தாக்கள், அதிலிருந்து எப்போது விலகுவது, எப்படி விலகுவது, அதற்கான பரிகாரம், பரிகாரத்துக்கு பொருத்தமாக எந்த கல்லை அணிய வேண்டும், அந்த கல்லை எப்படி அணிய வேண்டும், எந்த ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும் என பல விடயங்களை ஆலோசனைகளாகவும், தீர்வுக்கான வழிகாட்டலாகவும் முன்வைக்கிறேன்.

கேள்வி: இதனால் பயனடைந்தவர்களின் பின்னூட்டம் குறித்து...?

பதில்: நான் வசிக்கும் வீதியில் பதினைந்து வயதுடைய மாணவன் ஒருவன் இருந்தான். இயல்பாகவே நன்றாக கல்வி கற்கக்கூடிய அந்த மாணவன் எதிர்பாராத ஒரு விபத்தில் ஒரு கண்ணில் பார்வையை பறிகொடுத்தான். மற்றொரு கண்ணிலும் குறைவான பார்வைத்திறனே இருந்தது. 

சத்திர சிகிச்சைக்கு பிறகும் மருத்துவ நிபுணர்களால் அந்த மாணவனின் பார்வையை முழுமையாக மீட்டெடுக்க இயலவில்லை. அவன் முடங்கினான். பிறகு ஒரு தருணத்தில் நம்பிக்கை இல்லாத சூழலில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய அவரது பெற்றோர் என்னை அணுகினர். 

நான் அந்த மாணவனுக்கு அவனது பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகியவற்றை அறிந்து, சூட்சம எண்ணை கண்டறிந்து, அதற்குரிய பரிகார கல்லையும் கண்டறிந்து, அவனுக்கு பரிசாக அளித்தேன். 

அந்த மாணவனின் முழு நம்பிக்கையும், நான் வழங்கிய கற்கள் மீதும், என்னுடைய சொல்லின் மீதும் இருந்தது. 

மூன்று வாரங்களுக்குள் அவனுக்கு பார்வை மீண்டும் முழுதாக கிட்டியது. இதை நான் செய்தேன் என்று சொல்லி, சுட்டிக்காட்ட விரும்பவில்லை. இந்த பிரபஞ்சமும், இறை சக்தியும் என்னை ஊடக கருவியாக பயன்படுத்தி அந்த மாணவனின் பார்வையை திருப்பிக் கொடுத்தன!

கேள்வி: உங்களுடைய சோதிட வாழ்க்கையில் நிகழ்த்திய மாயாஜாலமான அனுபவம் குறித்து..?

பதில்: அதனை மாயாஜாலமான அனுபவம் என்று கூறுவதை நேரடியாக ஒப்புக்கொள்ள இயலாது என்றாலும், மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கூடுதலாக முக்கியத்துவம் வழங்கி, அவர்கள் ஆரோக்கிய ரீதியாக மீண்டும் இயல்பு நிலையில் அல்லது சற்று நிவாரணம் கிடைக்கும் நிலையில் இருப்பதற்கு முக்கியத்துவம் வழங்குகிறேன். 

அதற்காக அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான சூட்சும எண்ணை கண்டறிந்து, முதன்மையான பரிகார கற்கள் மற்றும் அதற்கு துணை புரியும் உதவி கற்கள், ஆலய பரிகார வழிபாடு... ஆகியவற்றை பற்றி எடுத்துரைக்கிறேன். 

அதனை தொடர்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் தான் எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. 

வேறு சிலருக்கு திருமண தடை, குழந்தைப்பேறின்மை, சொத்து தொடர்பான சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகள், தொழில் தடைகள், தொழில் முன்னேற்றம்... என அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை அளிக்கும் சூட்சும எண்ணை கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் பெயர் மாற்றம் அல்லது பெயரில் மாற்றம், அதற்கு வலு சேர்க்கும் வகையிலான பரிகார கற்கள் ஆகியவற்றை ஆலோசனைகளாக வழங்குகிறேன்.

பொதுவாக ஜோதிடத்தில் நிபுணராக இருப்பவர்கள் ஏதேனும் ஒரு குருவின் அனுக்கிரகத்தை பெற்றிருப்பார்கள். எண் கணித நிபுணர் டி.கேயை பொறுத்தவரை, அவர் தொடர்ச்சியாக 26 ஆண்டுகள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தவறாமல் திருவண்ணாமலை சென்று கிரிவலம் சுற்றி, அங்கு சூட்சுமமாக அருள் புரியும் சித்தர்களின் ஆசியை பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்