சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய செயலி

Published By: Digital Desk 5

06 Mar, 2023 | 09:15 PM
image

(நா.தனுஜா)

சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.

அச்செயலியில் பிரதான 7 மொழிகளில் அவசியமான அனைத்துத் தகவல்களும் உள்ளடக்கப்படும் அதேவேளை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகளின் விபரங்களும் சேர்க்கப்படவுள்ளது.

'சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கையில் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் அச்செயலியில் உள்ளடக்கப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் பற்றிய விபரங்களும் அச்செயலியில் உள்ளடக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுலாத்துறைசார் செயலி இம்மாத இறுதியில் வெளியிடப்படுமெனவும், இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயன்முறை மேலும் இலகுபடுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு...

2024-04-21 16:49:56
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39
news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு...

2024-04-21 13:47:04
news-image

இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை...

2024-04-21 13:35:30