கல்வி அமைச்சு மற்றும் Microsoft இணைந்து முன்னெடுக்கும் Imagine Cup Junior 2023 இல் தோற்றுவதற்கு மாணவர்களுக்கு அழைப்பு

Published By: Digital Desk 5

07 Mar, 2023 | 11:46 AM
image

Microsoft Imagine Cup Junior 2023 போட்டிக்கான விண்ணப்பங்கள் 13 முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. நான்காவது வருடாகவும் Imagine Cup Junior 2023 முன்னெடுக்கப்படுவதுடன், சிறுவர்களுக்கு தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ளவும், உலகின் பாரிய சவால்களை தீர்ப்பதற்கு அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அறிந்து கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும்.

மாணவர்களுக்கு AI for Earth, AI for Health, AI for Accessibility, AI for Humanitarian Action மற்றும் AI for Cultural Heritage ஆகிய ஐந்து பிரிவுகளில் ஒன்றில் போட்டியிட முடியும் என்பதுடன், அவர்களின் சிந்தனைகளை செயற்படுத்துவதற்கு Microsoft நிபுணர்களினால் வழிகாட்டல்கள் வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023, மே மாதம் 13 ஆம் திகதி ஆகும்.

இந்தப் போட்டி தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வை Microsoft அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Imagine Cup Junior என்பது, Microsoft Imagine Cup இன் கனிஷ்ட பிரிவாகும். இரண்டு தசாப்த காலமாக இந்தப் போட்டி பின்பற்றப்படுவதுடன், மாணவர்களுக்கு தமது தொழில்முயற்சியாண்மை திறன்களை வெளிப்படுத்தி, தொழில்நுட்பசார் தீர்வுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளுக்கு கட்டியெழுப்ப வாய்ப்பளிப்பதாக அமைந்துள்ளது. Artificial intelligence (AI)போன்ற தொழில்நுட்பங்களுக்கான சிறந்த அறிமுகமாக Imagine Cup Junior அமைந்துள்ளதுடன், எந்த நிலையில் தொழில்நுட்ப அறிவுமட்டத்தைக் கொண்ட மாணவர்களுக்கும் பொருத்தமானதாக அமைந்திருக்கும்.

கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த கருத்துத் தெரிவிக்கையில், “புதிய அறிவையும், தகவல்களையும் துரிதமாக ஏற்படுத்தி மாற்றமடைந்து வரும் உலகுக்கேற்ப மாறிக் கொள்வதற்காக நாம் வினைத்திறனான வகையில் செயலாற்ற வேண்டும். எமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த துரிதமாக மாற்றமடையும் சூழலுடன் இயங்கக்கூடிய வகையில், சரியான கல்வி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களை வழங்குவது முக்கியமானதாகும். எமது ஆசிரியர்களின் திறன்களை கட்டியெழுப்பும் திட்டங்களை நாம் அறிமுகம் செய்வதுடன், அதனூடாக மாணவர்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் எதிர்பார்க்கின்றோம். இந்தப் பயணத்தில், AI போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு மாணவர்களையும், கல்வி கற்பிப்போரையும் வெளிப்டுத்துவது மிகவும் முக்கியமானதாகும். Microsoft அறிமுகம் செய்யப்பட்டுள்ள Imagine Cup Junior 2023 போன்ற போட்டிகளினூடாக, எமது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சர்வதேச ரீதியில் புதிய அறிவைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன், தமது திறன்களை பரிசோதித்துக் கொள்ளவும், எதிர்காலத்துக்கு தயாரானவர்களாக மாற்றிக் கொள்ளவும் உதவியாக அமைகின்றது.” என்றார்.

படம்: கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த, Microsoft Imagine Cup Junior 2023 நிகழ்வில் உரையாற்றுகின்றார்.

Imagine Cup Junior 2023 தொடர்பில் Microsoft தெற்காசியா மற்றும் புதிய சந்தைகள் பொது முகாமையாளர் சூக் ஹுன் சீயா கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய மாணவர்கள், நாளையின் மாற்றத்துக்கான காரணிகளாக திகழ்கின்றனர். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நிஜ உலகில் மக்களுக்குக் காணப்படும் பிரச்சனைகளை தீர்ப்பதில் பங்களிப்பு வழங்கக்கூடிய வாய்ப்பை அவர்கள் கொண்டுள்ளனர். Microsoft நிபுணர்களிடமிருந்து வழிகாட்டல் பயிற்சிகளைப் பெற்று, மாணவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். ஒரே சிந்தனை கொண்ட மாணவர்களுடன் அவர்கள் பணியாற்றி, பெறுமதியான திறனைக் கட்டியெழுப்பிக் கொள்வார்கள்.” என்றார்.

படம்: தெற்காசியா புதிய சந்தைகள் பொது முகாமையாளர் சூக் ஹுன் சீயா, ஒன்லைன் ஊடாக இணைந்து, Imagine Cup Junior தொடர்பில் பாடசாலை அதிபர்களுடன் உரையாற்றுகின்றார்.

Microsoft இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் ஹர்ஷ ரந்தெனி கருத்துத்தெரிவிக்கையில், “இலங்கையில் Imagine Cup Junior ஐ முன்னெடுப்பதையிட்டும், எமது பாடசாலை மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதையிட்டும், AI ஐ பயன்படுத்தி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். 13 முதல் 18 வயது வரையான சிறுவர்கள், வழமையாக இடம்பெறும் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தவும், தாம் கருதும் மாற்றங்களை ஏற்படுத்த முன்வருபவர்களாகவும் திகழ்கின்றனர். Imagine Cup Junior ஊடாக AI அறிவு மற்றும் Microsoft சாதனங்களை அணுகச் செய்வதனூடாக, மாணவர்களுக்கு தமது திறன்களை மேம்படுத்திக் கொள்தற்கு வலுவூட்டப்படும். எதிர்காலத்துக்கு டிஜிட்டல் முறையில் வலுச்சேர்க்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஏதுவாக அமைகின்றது.” என்றார்.

படம்: Microsoft இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் ஹர்ஷ ரந்தெனி, Imagine Cup கனிஷ்ட சவால் பிரிவுகள் பற்றி விளக்கமளிக்கின்றார்.

சிறந்த 10 குளோபல் சமர்ப்பிப்பு வெற்றியாளர்கள் 2023 ஜுன் 7 ஆம் திகதி அறிவிக்கப்படுவார்கள். Microsoft Imagine Cup ஜுனியர் தொடர்பான மேலதிக தகவல்களை Imagine Cup Junior 2023 | Imagine Cup (microsoft.com).  எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

Microsoft பற்றி

மதிநுட்பமான cloud யுகத்துக்கு டிஜிட்டல் மாற்றியமைப்பை Microsoft செயற்படுத்துவதுடன், உலகிலுள்ள ஒவ்வொரு நபரையும், நிறுவனத்தையும் அதிகளவு எய்தச் செய்யக்கூடிய வகையில் வலுவூட்டுவது அதன் நோக்காகும்.

மேலதிக தகவல்களுக்கு, ஊடகங்கள் மட்டும்:

Microsoft SEA New Markets

Thilanka Abeywardena

Thilanka.Abeywardena@microsoft.com

Ogilvy Public Relations Sri Lanka

Tinaz Amit

Tinaz.Amit@ogilvy.com

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'சூர்யா'வுக்கான வர்த்தக நாமத் தூதுவராக இலங்கை...

2023-03-23 15:05:01
news-image

கடல் சுத்திகரிப்புத் திட்டத்தினூடாக தூய்மையான இலங்கையை...

2023-03-23 10:52:04
news-image

மக்கள் வங்கிக்கு சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள்...

2023-03-20 16:26:13
news-image

Daraz Express இனூடாக பெண் ஓட்டுநர்களின்...

2023-03-18 16:53:49
news-image

தனது நிலையான பயணத்தை தொடரும் அமானா...

2023-03-17 11:16:17
news-image

யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையில்...

2023-03-15 17:19:59
news-image

மக்கள் வங்கியின் வனிதா வாசனா மூலமாக...

2023-03-07 11:16:52
news-image

கல்வி அமைச்சு மற்றும் Microsoft இணைந்து...

2023-03-07 11:46:52
news-image

வளர்ந்துவரும் இளம்தொழில் வல்லுநர்கள் நவீன மற்றும்...

2023-03-07 11:47:17
news-image

2022 ஆண்டிற்கான சிறந்த பெறுபேறுகளை பான்...

2023-02-28 11:36:32
news-image

சன்குயிக் ரெடி டு டிறிங்க் தொழிற்சாலையினை...

2023-02-27 14:34:37
news-image

"தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய்...

2023-02-27 11:28:32