இலங்கையின் நவீன மற்றும் சமகாலகலை அருங்காட்சியகமானது (MMCA இலங்கை), கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன் முயற்சியாகும். பொதுமக்கள்,பாடசாலைகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகாலகலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது.
உலகளாவியரீதியில் அருங்காட்சியகங்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு சூழலில், துடிப்பான செயற்பாட்டுத்திறன் கொண்ட இளம்தொழில் வல்லுநர்கள் இம்மிகமுக்கிய நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்கிறார்கள்.
2019ம் ஆண்டு தொடங்கிய MMCA இலங்கை நான்கு பணியாளர்களிலிருந்து 12 பணியாளர்களாக வளர்ந்துள்ளது. இவ்வளர்ந்து வரும் இளம்தொழில் வல்லுநர்குழுவில், பிரமோதாவீரசேகரதுணை எடுத்தாளுநர், கல்வி மற்றும் பொதுநிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர், சானுஜகுணாதிலக, எடுத்தாளுநர், கற்றல் மற்றும் பயிற்றுவித்தல் மற்றும் தினால்சஜீவ, துணைஆய்வாளர் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள்தங்களின் MMCA இலங்கையில் பணியாற்றிய காலத்தை பற்றிய கருத்துகளை பகிர்ந்துகொள்கின்றனர்.
1. MMCA இலங்கையில் பணியாற்றிய முக்கிய தருணங்கள் எவை?
பிரமோதா:
2019ம் ஆண்டில் MMCA இலங்கையை ஸ்தாபித்து குழுவுடன்பணியாற்றியதிலிருந்து, முதல் கண்காட்சியான'நூறாயிரம் சிறியகதைகள்' இன்னொரு முக்கியதருணமாகும்.
பொதுநிகழ்ச்சிகளை வடிவமைக்கும் பின்னணியிலுள்ள எடுத்தாளுநர் முறைமைகள் மற்றும் பாடசாலை /பல்கலைக்கழகவருகைகளை ஒழுங்கு செய்வது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
பாடசாலை வருகைகளில் நான் மறக்கமுடியாதது, காதலர்தினத்தையொட்டி 60 முன்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சுற்றுப்பயணம் ஒன்றை 2020ல் ஒழுங்குசெய்ததாகும்.
சானுஜ:
எமது வருகை கல்வியாளர்களைப்பற்றிவரும் நேர்மறையானகருத்துகள் மற்றும் பயிற்சிபணியாளர் இத்துறையிலேயே முன்னோக்கி செல்லமுடிவெடுத்தது எனக்கு முக்கியதருணங்கள் ஆகும்.
கடந்தவருடத்தில் அருங்காட்சியகதீவிரபயிற்சியை சர்வதேச பயிற்றுவிப்பாளர்களுடன் முதன் முறையாக இணைந்து நடாத்தியது முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.
தினால்:
அருங்காட்சியகத்தில் பயிற்சி பணியாளராக பணிக்கு இணைந்து பின்னர் முழுநேரபணியாளராகும் வாய்ப்பு கிடைத்தது மிக முக்கிய தருணம் ஆகும்.
பரந்தமனமும் நேர்மறையான சூழலைக்கொண்ட பணியிடம் மற்றும் மேலாளர்களின் வழிகாட்டுதலுக்கும் நான் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளேன். எனது தனிப்பட்ட மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு MMCA இலங்கை பெரும் பங்குவகிக்கின்றது.
2. உங்களது பொறுப்புகள் எவ்வாறு நீங்கள் பணிக்கமர்ந்தநாளிலிருந்து உருமாறியுள்ளன?
பிரமோதா:
பணியின் முதல் வருடத்தில் இலங்கையின் மற்றும் கொழும்பின் கல்வி நிலைமையை ஆராய்ந்து அதற்கேற்ப அருங்காட்சியகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வடிவமைப்பதாகும். எமது இரண்டாவது கண்காட்சியான 'சந்திப்புகள்' கண்காட்சியில் எனது பனிபொது நிகழ்ச்சிகளைபற்றியதாகும்.
வெகுவிரைவில் நான் கணிசமான அளவுவளநபர்களுடனும் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட குழுக்களுக்கு பொதுநிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்வதாகும்.
சானுஜ:
MMCA இலங்கையில் பணிபுரிய நான் 2021ம் ஆண்டின் நடுப்பகுதியில் விண்ணப்பித்து அருங்காட்சியகத்தின் கற்றல் மற்றும் பயிற்றுவித்தலின் முதலாவது துணை எடுத்தாளுநராக பணி உயர்வுகிடைத்தது.
எமது அனைத்து பயிற்சிசெயற்பாடுகளையும் ஆய்வுசெய்து, மேற்பார்வை செய்தல் மற்றும் பரிசீலனை செய்தலாகும். மேலும் நீண்டகால நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் மேலதிககவனம் செலுத்தி வருகின்றேன்.
தினால்:
MMCA இலங்கையில் வருகை கல்வியாளராக பணிக்கமர்ந்த ஆரம்பகாலங்களில் எனது பொறுப்புகள் விருந்தினர்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளைகையாளுவதாகும். பயிற்சி பணிகாலத்தில், தயாரிப்புகாலங்களில் கலைப்படைப்புகளுடன் மேலும் ஊடாடுவதற்கு எனக்கு வாய்ப்புகிடைத்தது.
தற்பொழுது எனது முழுநேர பணியில், ஆய்வுசெய்தல் மற்றும் தொகுப்புகளை வகைப்படுத்தலாகும். அருங்காட்சியகத்தில் எனதுகடைமைகள் எவ்வாறு அதிகரித்துள்ளன என்பதை காணக்கூடியதாகவுள்ளது.
3. MMCA இலங்கையில் ஏன் பணியாற்ற விரும்புகின்றீர்கள்?
பிரமோதா:
கலையைப் பற்றிய என் எண்ணங்களும் அருங்காட்சியகத்தின் அணுகுமுறையும் ஒருவகைப்பட்டவையாகும். அருங்காட்சியகத்தின் மிகப்பெரியகனவான இலங்கையில் நவீன மற்றும் சமகாலகலையை வளர்த்தல் மற்றும் முக்கிய குழுவின் முயற்சியில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
அறிவைப்பகிர்தல் மற்றும் கற்றல் அனுபகவகங்களிலிருந்து மாணவர்கள், கலைகல்வியாளர்கள், சிறுவர்கள், சிந்திப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டது எனக்கு மிகமுக்கிய உந்துசக்தியாகும்.
சானுஜ:
அருங்காட்சியக கல்வி மற்றும் கற்பனை இடஅமைப்பு டிஜிட்டல் உலகிற்கு மிகப்பெரிய சவாலாகும். எனக்கு அது பிடிக்கும். எனது தற்போதைய பொறுப்பான கற்றல் மற்றும் பயிற்சிவிப்பு எதிர்காலத்தை நோக்கியிருக்கும். ஆகையால், MMCA இலங்கையின் கலாசார மற்றும் பொருளாதார நிறுவன அமைப்பிற்கு பங்களித்ததை எண்ணி பெருமையடைகின்றேன்.
தினால்:
ஆரம்பத்தில் கலையில் எனக்கு பெரிய ஈடுபாடு இருக்கவில்லை ஆனால் அருங்காட்சியகத்தில் பணிபுரியவாய்ப்பு கிடைத்த பின்னர் இத்துறையில் எவ்வளவு தூரம் நான் முன்னேறமுடியும் என்பதை அறிந்துகொண்டேன். ஆகையால், எனது திறமைகளை வளர்த்துக் கொண்டு ஒருநாள் இவ் அருங்காட்சியகத்தின் எடுத்தாளுனர் ஆவேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM