தலைநகரில் சைவ உணவுத்திருவிழா

Published By: Digital Desk 5

06 Mar, 2023 | 04:03 PM
image

(அ.நிவேதா)

நட்சத்திர விடுதிகள் என்றாலே உல்லாசமும் சுவையான உணவுகளுமே மனக்கண்முன் வந்துநிற்கும். இத்தகைய விடுதிகள் தங்களை நாடிவரும் வாடிக்கையாளர்களின் மனதை வெல்ல தினமொரு புதிய ஏற்பாடுகளை மேற்கொண்ட வண்ணமாகவே உள்ளன. 

குறிப்பாக வெளிநாட்டு பிரஜைகள் அதிகம் விரும்பி வருகைத்தருகின்ற நாடாக இலங்கை விளங்குகின்றது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடென்றபோதிலும் சிறந்த சுற்றுலா தளத்திற்கு பெயர் பெற்ற இடமாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் தேவைகளை திருப்திப்படுத்துவதற்காக உருவான நட்சத்திர விடுதிகள் நாளாந்தம் புதிய விடயங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க முற்படுகின்றன. இதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்க விளைகின்றன. 

அதிகரித்த வேளைப்பளு, பரம்பரை மற்றும் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய நோய்களால் தற்போது மக்களுக்கு தமது வாழ்நாள் நீடிப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.  இதனால் இன்று அனைவராலும் தேடித்தேடி சுவைக்கப்படுகின்ற பாரம்பரிய உணவுகளாக சைவ உணவுகள் மாறியுள்ளன. 

இதனால் தேவையேற்படில் விலையை பொருட்படுத்தாமல் இயன்றவரை பாரம்பரிய உணவுகளை தேடி ஓட ஆரம்பித்துவிட்டனர். 

இதையறிந்த உணவகங்களும்,நட்சத்திர விடுதிகளும் தமது கைவண்ணங்களை காண்பித்து போட்டிச் சந்தையில் தமது பெயரை நிலைநாட்ட முயற்சிக்கின்றன. 

அப்படியொரு முயற்சியில் களமிறங்கியுள்ள நட்சத்திரவிடுதி ஒன்றை பற்றியதாகவே இந்த கட்டுரை அமையப்பெற்றுள்ளது. 

எமது தலைநகரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளில் ஒன்றான சினமன் ரெட் (Cinnamon Red Colombo) என பெயர் குறிப்பிடப்படும் 3 நட்சத்திர தர குறியீட்டை பெற்றுள்ள உல்லாச விடுதியானது கடந்த பெப்ரவரி மாதம் முதல் தமது வாடிக்கையாளர்களுக்கு புதிய உணவு வலையம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதாவது முற்றிலும் சைவ உணவுகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிறந்த சமையல் வல்லுநர்களின் தயாரிப்பில் இந்த புதிய சைவ உணவுத்திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்த நட்சத்திர விடுதியின் முகாமையாளரான டெரென்ஸ் பெர்னாண்டோ (Terrence Fernando) தெரிவித்துள்ளார். 

இந்த சைவ உணவு விருந்தானது ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தன்று வழங்கப்படும் அதேவேளை நபரொருவருக்கு இலங்கை ரூபாவின் படி ஆகக்குறைந்த தொகையாக 4,500 ரூபாவை கொண்டு இந்த உணவுகளை சுவைக்ககூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்த சைவ உணவுத்திருவிழாவின் 2 ஆவது கட்டம் இன்று 6ஆம் திகதி பெளர்ணமி தினத்தன்று இலக்கம் 59, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள இந்த விருந்தக கட்டிடத்தின் 8ஆவது மாடியில் நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையில் நடாத்தப்பட்டது.

இந்த சைவ உணவுத்திருவிழாவில்  Breadfruit Sliders on a Spinach Bun, Corn Chowder, Mushroom and Cauliflower Wellington, Moroccan Couscous Biriyani, Jack Fruit Kottu and Coconut and Caramel Cream Cake என பல்வேறு வகையான உணவுகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. 

இலங்கைக்கே உரித்தான சைவ உணவு வகைகள் மாத்திரமின்றி உலகளவில் பிரசித்தமான சுமார் 55 க்கும் அதிகமான சைவ உணவு வகைகள் இங்கு தயாரிக்கப்படுவதுடன் தலைநகரில் இந்த உல்லாச விடுதியில் மாத்திரமே இதுபோன்ற வித்தியாசமான சைவ உணவுத்திருவிழா நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 703145175 அல்லது 0712145175 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ள முடியும். மேலும் www.cinnamonhotels.com   என்ற இணையத்தள முகவரி ஊடாகவும் தகவல்ளை பெற்றுக்கொள்ள முடியும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54