உலகளவில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் தைரொய்ட் சுரப்பி தொடர்பான பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. ஹைப்பர் தைரொய்டிசம், ஹைபோதைரொய்டிசம், தைரொய்ட் கட்டிகள், தைரொய்ட் முடிச்சுகள் என இத்தகைய பாதிப்புகளை வகைப்படுத்தினாலும், இதற்கு முழுமையாக நிவாரணம் அளிக்கக்கூடிய பின்ஹோல் சிகிச்சை எனும் புதிய சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
தைரொய்ட் எனும் சுரப்பி எம்முடைய கழுத்துப் பகுதியில் அமையப்பெற்றிருக்கிறது. இந்த சுரப்பியின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டு, இதன் இயங்கு திறனில் பாதிப்பு ஏற்பட்டால்..., எம்மால் உணவுகளை மென்று விழுங்குவதில் கடும் சிரமம் ஏற்படும். சிலருக்கு தைரொய்ட் சுரப்பியில் ஏற்படும் கட்டி புற்றுநோயாக மாறக் கூடிய பாதிப்பையும் உண்டாக்கும். இந்நிலையில் இங்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
தற்போது தைரொய்ட் கட்டியின் அளவை பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானித்த பின், அதனை எத்தகைய சிகிச்சை மூலம் அகற்றலாம் என மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள். இந்நிலையில் தைரொய்ட் கட்டியின் அளவு ஆறு சென்டிமீற்றருக்குள் இருந்தால் அவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ரேடியோ ஃப்ரீகுவன்சி அப்ளேஷன் எனப்படும் பின்ஹோல் சிகிச்சை மூலம் முதன்மையான நிவாரணத்தை முழுமையாக வழங்க இயலும்.
இத்தகைய சிகிச்சையின் போது நோயாளிக்கு சத்திர சிகிச்சையின் போது அளிக்கப்படும் மயக்கவியல் சிகிச்சை அவசியமில்லை. மேலும் இத்தகைய சிகிச்சையால் அப்பகுதியில் வடுக்களோ.. தழும்புகளோ.. ஏற்படுவதில்லை. சிகிச்சைக்குப் பின்னர் இயல்பாக சுவாசிக்க இயலும். உணவுகளை எளிதாக மென்று விழுங்க இயலும். இருப்பினும் மருத்துவரின் தொடர் கண்காணிப்பு தேவை. அவர்களின் அறிவுறுத்தலை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் தைரொய்ட் கட்டிகளுக்கு சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வு என்ற நிலை மாறி, பின்ஹோல் சிகிச்சை மூலமாகவும் தைரொய்ட் கட்டிகளை அகற்ற இயலும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
டொக்டர் கார்த்திகேயன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM