கொலம்பியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டிருந்த 78 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 84 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் சான் வின்சென்ட் டெல் ககுவான் நகரில், எண்ணெய் அகழ்வு நிறுவனம் ஒன்றை உள்ளூர் மக்கள் கடந்த வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாக்குறுதி அளித்திருந்தபடி, வீதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி கடந்த நவம்பர் முதல் உள்ளூர் மக்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குறித்த நிறுவனத்தின் வளாகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்த்தின்போது வன்முறைகளும் வெடித்தன.
இதன்போது, 79 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எண்ணெய் நிறுவனத்தின் 6 ஊழியர்களும் பணயக்கைதிகளாக ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்துவைக்கப்பட்டனர்.
அவர்களை விடுவிக்குமாறு கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரா கோரியிருந்தார்.
ஆனால், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் குடிமகன் ஒருவரும் வன்முறைகளின்போது கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், 78 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 6 ஊழியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரா நேற்றுமுன்தினம் அறிவித்தார்.
அத்துடன் இருவர் கொல்லப்பட்டமைக்கு காரணமானவர்களை கண்டறிய விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி இருவரும் துப்பாக்கிச் சூடுகளால் உயிரிழந்தனர் என உள்துறை அமைச்சர் அல்போன்சோ ப்ராடா கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM