உபேந்திரா நடிக்கும் 'கப்ஜா' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

06 Mar, 2023 | 12:22 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான 'ரியல் ஸ்டார்' உபேந்திரா, கிச்சா சுதீப் ஆகியோர் நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர். சந்துரு  இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கப்ஜா'. 

இதில் ரியல் ஸ்டார் உபேந்திரா, கிச்சா சுதீப், டாக்டர் சிவராஜ் குமார், ஸ்ரேயா சரண், முரளி சர்மா, பூசனி கிருஷ்ணா, முரளி, சுதா, கபீர் துஹான் சிங், காமராஜன், நவாப் ஷா, ஜான் கொக்கன், டேனிஷ் அக்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஜே. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எம். டி. பி நாகராஜ் வழங்குகிறார்.

மார்ச் மாதம் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் படமாளிகைகளில் வெளியாகிறது. 

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் 1945 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடைபெறும் சம்பவங்கள் இடம் பிடித்திருப்பதாலும், படத்தின் வசனங்கள் அர்த்தமுள்ளதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த படத்தின் முன்னோட்டம் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, இணையத்தில் டிரெண்டிங்கில் முன்னணி இடம்பிடித்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37