காஜல் அகர்வால் நடிக்கும் 'கோஸ்ட்டி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

06 Mar, 2023 | 11:47 AM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளின் ஒருவரான காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கோஸ்ட்டி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'ஷூ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கோஸ்ட்டி'. இதில் நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், நகைச்சுவை நட்சத்திரங்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஜெகன், சத்யன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, லொள்ளு சபா சுவாமிநாதன், மதன் பாபு, குணச்சித்திர நடிகர்களான ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மூத்த நடிகைகளான ராதிகா சரத்குமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சீட் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனத்திற்காக தயாரிப்பாளர்கள் ஜி. ஜெயராம் மற்றும் சுதன் சுந்தரம் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்..., படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 17ஆம் திகதியன்று படமாளிகையில் வெளியாகிறது.

இதனிடையே நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும், 'கோஸ்ட்டி' திரைப்படத்தின் வெற்றிக்காக அவர் நம்பிக்கையுடன்  காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30