இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடத்தும் முதலாவது மகளிர் ப்றீமியர் லீக் (WPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டி, மகளிர் விளையாட்டுத்துறையில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது.
இப்போட்டிகளில் பங்குபற்றும் 5 அணிகளும் சுமார் 572 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளன. 2008 ஆம் ஆண்டு ஆண்களுக்கான முதலாவது இண்டியன் ப்றீமியர் லீக் சுற்றுப்போட்டிக்கான 8 அணிகளும் விற்கப்பட்டபோது செலுத்தப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு தற்போது மகளிர் அணிகள் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளன.
முதல் 5 வருடங்களுக்கான ஊடக உரிமைகள் விற்பனையையும் கருத்திற்கொண்டால் மகளிர் ப்றீமியர் லீக் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னரே இப்போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் சபை சுமார் 700 மில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளது.
மகளிர் விளையாட்டுத்துறையில், அமெரிக்க தொழிற்சார் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது மிகப் பெறுமதியான உள்நாட்டு விளையாட்டுப் போட்டியாக WPL விளங்குகிறது.
மும்பை இண்டியன்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், டெல்ஹி கெபிட்டல்ஸ், றோயல் சலெஞ்சர்ஸ், யூபி வோரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன.
கடந்த ஜனவரி மாதம், மும்பை, பெங்களூரு, டெல்லி நகரங்களை தளமாகக் கொண்ட 3 மகளிர் அணிகளை, அந்நகரங்களை தளமாகக் கொண்ட ஆண்கள் ஐபில் அணிகள் வாங்கின. அஹமதாபாத்தை தளமாகக் கொண்ட குஜராத் அணியை அதானி குழுமம் வாங்கியது. லக்னோவை தளமாகக் கொண்ட யூபி வோரியர்ஸ் அணியை கெப்ரி குளோபல் நிறுவனம் வாங்கியது.
முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளை தலா 2 தடவைகள் எதிர்த்தாடும். மார்ச் 26 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை மும்பை இண்டியன்ஸ் 143 ஓட்டங்களால் வென்றது
இன்று இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்றைய முதல் போட்டியில் றோயல் சலெஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்ஹி கெபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. மற்றொரு போட்டியில் யூபி வோரியர்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ் ஆகியன மோதவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM