உலகைச் சுற்றி... 

Published By: Nanthini

05 Mar, 2023 | 07:56 PM
image

சிறுநீர் கழித்த மாணவன் மீது குற்றச்சாட்டு

மெரிக்க எயார் லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் குடிபோதையில் சக ஆண் பயணியொருவர் மீது சிறுநீர் கழித்ததாக மற்றுமொரு சம்பவம் முறையிடப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை 9 மணிக்கு புறப்பட்ட குறித்த விமானம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை  சனிக்கிழமை இரவு 10:12 மணிக்கு வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணித்த அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். 

'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி: விஞ்ஞானி உயிரிழப்பு! 

கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கடந்த 2020ஆம் ஆண்டு கண்டுபிடித்த ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவில் அங்கம் வகித்த அன்ட்ரி போட்டிகோவ் (வயது 47) என்ற விஞ்ஞானி, அவரது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்டு 29 வயதான நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கடலை பாதுகாக்க 'உடன்பாடு': 2030இல் 30 வீத கடற்பகுதிகள் சாத்தியம்!

10 ஆண்டுகால பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து உலகின் கடற்பரப்பை பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாடு நியூயோர்க்கில் சர்வதேச நாடுகள் மத்தியில்  எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டின்படி, 2030ஆம் ஆண்டளவில் கடலில் 30 வீத பகுதிகள்  பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருக்கும்.

உக்ரேன்: போர் பூமியில் தலைவிரித்தாடும் தட்டுப்பாடுகள்

ஷ்ய மற்றும் உக்ரேனிய படைகளின் மோதலையடுத்து உக்ரேனிய பக்முட் நகரம் பெருமளவு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பக்முட்டின் வீதிகளில் மோதல் தொடர்கிறது. இதேவேளை, கிழக்கு நகரத்தை ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்று அதன் துணை மேயர் தெரிவித்துள்ளார். அங்குள்ள சுமார் 4,000 பொதுமக்கள் எரிவாயு, மின்சாரம், தண்ணீர் கிடைக்காமல் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஈரானில் இலக்கு வைக்கப்படும் 'சிறுமிகள்' 

ஈரானில் மாணவிகளை பாதிக்கும் வகையிலான விஷத் தாக்குதல்களை கண்டித்து தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும்போக்கு இஸ்லாமிய குழுக்களால் சிறுமிகள் இவ்வாறு குறி வைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் மற்றும் சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13