வாகன சாரதிகளுக்கு எதிராக அரசாங்கம் அறவிட இருந்த 25 ஆயிரம் அபராதத்தொகை தொடர்பில் திருத்தங்களை கொண்டுவரவுள்ளது.

குறித்த விடயத்தினை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (01) தெரிவித்துள்ளார்.

குறித்த தண்டப்பணத்துக்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் குறித்த இந்த அறிவிப்பை நிதியமைச்சர் விடுத்துள்ளார்.

வீதிவிதிமுறைகளை மீறும் ஆறு குற்றச்செயல்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதத்தை விதிக்க அரசு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.