அதர்வா நடிக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

04 Mar, 2023 | 05:02 PM
image

நடிகர் அதர்வா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'துருவங்கள் பதினாறு' எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அவரது இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. 

இதில் அதர்வா, சரத்குமார், ரகுமான், சின்னி ஜெயந்த், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். ‌

ஹைபர் லிங்க் பாணியிலான இந்தத் திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கருணாமூர்த்தி தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியுட்டிற்கு தயாராகி இருக்கும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் அதர்வா, நான்கு வெவ்வேறு தோற்றங்களில் தோன்றி... ஸ்ரீ, வெற்றி, செல்வம், வசந்த்..என நான்கு கதாபாத்திரங்களின்... மூன்று கதைகளை.. வித்தியாசமான முறையில் விவரிக்கிறார். இவரது கதை சொல்லும் உத்தி.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right