புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாட்டின் பிரதான இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவே தனிப்பட்ட சிலரின் தேவைக்கான மாத்திரம் அரசியலமைப்பினை உருவாக்க நாம் தயாராக இல்லை அவ்வாறான அரசிலமைப்பு உருவாகினாலும் அதனை நிறைவேற்றப்போவதும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.